செஞ்ச பாவம் சும்மா விடாது! வீடியோவில் சீமானுக்கு சாபம் விடும் விஜயலட்சுமி!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், புதிய வீடியோவில் சீமானை கடுமையாக சாடியுள்ளார். தனக்கு செய்த பாவம் சும்மா விடாது என சாபம் விடுத்துள்ளார்.

Actress Vijayalakshmi Latest News

நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என வழக்கு தொடர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Actress Vijayalakshmi - NTK leader Seeman

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டு சீமானை சரமாரியாகச் சாடியுள்ளார். தனக்குச் செய்த பாவம் உங்களைச் சும்மா விடாது என்று சீமானுக்கு சாபம் விடுவது போல பொறிந்து தள்ளியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

Vijayalakshmi vs Seeman

"விஜயலட்சுமியை திமுகதான் கூட்டி வந்திருக்கிறது என்று சீமான் சொல்கிறார். சீமான் அவர்களே முதலில் விஜயலட்சுமி யார் என்றே தெரியாதுன்னு சொன்னீங்க. அப்புறம் போன வருஷம் பேச்சுவார்த்தைக்காகன்னு என்னைத் தேடி நீங்களே வந்தீங்க. என்னைப் பற்றி பேசாதீங்கன்னு சொன்னீங்க. உங்க பொன்னான வாயால 'பொண்டாட்டி... பொண்டாட்டி...'ன்னு கூப்டீங்க. அப்பறம் என் வீடியோ கேட்டீங்க.

Actress Vijayalakshmi Viral Video

இப்போ என்னை திமுகதான் அழைச்சுட்டு வந்திருக்காங்கன்னு சொல்றீங்க. போன வருஷம் என்னிடம் வந்து மாதம் ரூ.50 ஆயிரம் தரேன்னு திமுக ஒண்ணும் சொல்லல. இப்போ என்ன சொல்றீங்க, அந்தப் பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்கேதான் இருக்கேன் சீமான்.

Actress Vijayalakshmi Case against Seeman

என்னைப் பார்த்தா எப்படிடா இருக்குன்னு கேட்க நான் ரெடியாத்தான் இருக்கேன். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட பேச்சுவார்த்தைன்னு ஆள் அனுப்பிட்டு, பிரஸ் மீட்ல என்னைப் பற்றி அப்படி, இப்படின்னு பேசியிருக்கீங்க. என்னோட பாவம் சும்மா விடாது. இன்னும் என்னவெல்லாம் பண்ணப்போகுதுன்னு பாருங்க. சீமான் இந்த வீடியோவை நிச்சயமா பாக்கணும்." இவ்வாறு நடிகை விஜயலட்சுமி தனது வீடியோவில் கூறியிருக்கிறார்.

Read Entire Article