ARTICLE AD BOX
சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த இரண்டு படங்களைப் பற்றிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "ரெட்ரோ" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 1ஆம் தேதி, தொழிலாளர் தினத்தில் வெளியிடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் "வாடிவாசல்" திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் நமக்கு அளித்த பிரத்யேக அளித்த பேட்டியில் ஜிவி பிரகாஷ் கூறியதாவது:
"வாடிவாசல்" படத்தின் பாடல் கம்போசிங் பணியை தொடங்கலாம் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். அதேபோல் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படத்திற்கும் நானே இசையமைக்கிறேன். மேலும் ‘இட்லி கடை; உள்பட பல பெரிய படங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
சூர்யா நடிக்கும் "வாடிவாசல்" மற்றும் வெங்கி அட்லுரி இயக்கும் புதிய படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்த அப்டேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.