ARTICLE AD BOX
சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க உள்ள இயக்குனர், "இந்த கதையில் சூர்யாவால் மட்டுமே நடிக்க முடியும்" என்று பெருமிதத்துடன் கூறிய பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது "ரெட்ரோ" என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜியின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் அடுத்த படமான "வாடிவாசல்" படத்தை வெற்றிமாறன் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சமீபத்தில் வெளியான "தண்டேல்" படத்தை இயக்கிய சந்து மொண்டேட்டி என்பவர், சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உறுதி செய்தார் என்பது தெரிந்தது.
இந்நிலையில் இயக்குனர் சந்து மொண்டேட்டி அளித்த பேட்டியில், "சூர்யாவுக்காக நான் எழுதிய கதை மிகவும் பெரியது. இப்போதும் அவருடன் இந்த கதை குறித்து ஆலோசனை பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும். சூர்யா மாதிரி ஒரு நடிகரால் மட்டுமே இந்த கதையில் நடிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.