சூரிய ஒளியே உங்க மேல படலையா? அந்த சக்தி இந்தக் கீரையில்: டாக்டர் அமுதா

11 hours ago
ARTICLE AD BOX

சில நேரங்களில் நமக்கு சூரிய ஒளி சற்று குறைவாக கிடைக்கும். நம்முடைய உடலுக்கு சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக் கூடிய விட்டமின் டி அவசியம். அதேநேரம் மழை மற்றும் பனி காலங்களில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால், நமக்கு விட்டமின் டி குறைவாக கிடைக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

அதேநேரம் நம் உணவில் ஒரு கீரையை சேர்ப்பதன் மூலம் நமக்கு தேவையான கால்சியத்தை பெறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் விட்டமின் டி கிடைக்க எந்த கீரையை சாப்பிட வேண்டும் என டாக்டர் அமுதா தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

அதன்படி, ஒரு நாளைக்கு 1000 யூனிட்ஸ் அளவுக்கு கால்சியமும், விட்டமின் டி3-யும் நமக்கு தேவைப்படும். நமக்கு தேவையான கால்சியத்தை நாம் பால் மூலமாக எடுத்துக் கொள்கிறோம். சில உணவுகள் மூலமாக எடுத்துக் கொள்கிறோம். கூடுதலாக சூரிய ஒளியில் இருந்து எடுத்துக் கொள்கிறோம். அதேநேரம் மழை மற்றும் பனிக் காலங்களில் சூரிய வெளிச்சம் அதிகமாக நமக்கு கிடைக்காது. 

இதுபோன்ற காலங்களில் நாம் பாலக்கீரை எடுத்துக் கொள்ளலாம். கால்சியமும், விட்டமின் டி3-யும் அதிகளவில் பொக்கிஷமாக கிடைக்கக் கூடியவற்றில் முதன்மையானது பாலக்கீரை தான். இந்தக் கீரையை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், தேவையான விட்டமின் டி நமக்கு கிடைக்கும்.

Advertisment
Advertisements

இந்தக் கீரையை சூப் போன்று சாப்பிடலாம், அரைத்து தோசையாக சாப்பிடலாம், பருப்புடன் சேர்த்து கூட்டு போன்று சாப்பிடலாம். 

கால்சியம் மாத்திரை, விட்டமின் டி3 மாத்திரைகள் என்று மாத்திரைகளை தேடி ஓடுவதை விட, கால்சியம் மற்றும் விட்டமின் டி3 கிடைக்க இந்த பாலக் கீரையை வாரத்திற்கு இரண்டு முறை நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம். 

Read Entire Article