ARTICLE AD BOX
சூரிய ஒளி மின்சக்திக்கான உபகரணங்கள் உற்பத்தி..1 பில்லியன் டாலர் வழங்க மத்திய அரசு திட்டம்..
சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கு 1 பில்லியன் டாலர்கள் அளவிலான மானியத்தை வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும் என்ற போக்கு அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய ஒளி சக்தி மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா சூரிய ஒளி மின் சக்திக்கு தேவையான சோலார் பேனல்கள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக உருவாக வேண்டும் என மத்திய அரசு திட்டமிடுகிறது.

தற்போதைக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டில் சோலார் பேனல்களை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களுக்கு சீனாவை தான் சார்ந்திருக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு சீனாவை சார்ந்திருக்கும் போக்கை மாற்ற வேண்டும், இந்தியாவில் தயாரிக்கும் சோலார் பேனல்கள் மற்றும் செல்கள் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு முடிவெடுத்துள்ளது.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் உள்நாட்டில் சோலார் பேனல்கள், செல்கள் மற்றும் வேஃபர்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கான மூத்த ஆலோசகர்கள் கூட அரசு சோலார் பேனல்கள், செல்கள் மற்றும் வேஃபர்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரை வழங்கி இருக்கிறார்கள். எனவே தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இதில் தீவிரமாக இருக்கிறது.
இது தொடர்பான திட்டம் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறும் என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களின் தரம் மற்றும் தேசிய எரிசக்தி பாதுகாப்புக்கு இது குந்தகம் விளைவிக்குமா என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
இந்தியாவிலேயே சோலார் பேனல் மாடல்கள் மற்றும் செல்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் இந்தியாவின் தேவையை நிவர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி நடைபெறவில்லை. இந்தியாவை பொறுத்தவரை தற்போதைக்கு 71 கிகாவாட் சோலார் மாட்யூல்கள் மற்றும் 11 கிகாவாட் சோலார் செல்களை உற்பத்தி செய்யக்கூடிய
இந்த நிலையில் மொபைல் போன் உற்பத்திக்கு அரசு மானியம் வழங்கி எப்படி உற்பத்தியை ஊக்குவித்ததோ அதேபோன்ற ஒரு மாடலை பின்பற்றி சோலார் மின் உற்பத்திக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கு முன்வந்துள்ளது. எனவே ஏற்கனவே இந்த துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை பெருக்குவதற்காக அரசு மானியத்தை பெற முடியும்.
Story written by: Devika