சூப்பர் திட்டம்…! இளம் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் மத்திய அரசு…!

16 hours ago
ARTICLE AD BOX

இளம் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வீதம் அதிகபட்சமாக 400 கலைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு நான்கு சம ஆறு மாத தவணைகளில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பாரம்பரிய நடன வடிவங்கள், சுதேச கலைப்படைப்புகள் மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்கள் போன்ற பல்வேறு கலாச்சாரத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இளம் கலைஞர்களுக்கு அந்தந்த துறைகளில் மேம்பட்ட பயிற்சி பெறுவதற்காகவும் ஆதரவளிப்பதற்காகவும் ‘பல்வேறு கலாச்சார துறைகளில் இளம் கலைஞர்களுக்கான உதவித் தொகை’ என்ற பெயரில் நிதி மானியத் திட்டத்தை கலாச்சார அமைச்சகம் செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.5,000/- வீதம் அதிகபட்சமாக 400 கலைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு நான்கு சம ஆறு மாத தவணைகளில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஏதேனும் ஒரு குரு அல்லது நிறுவனத்தின் கீழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முன் நேர்காணல் / கலந்துரையாடலின் மூலம் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் அறிஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

The post சூப்பர் திட்டம்…! இளம் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் மத்திய அரசு…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article