ARTICLE AD BOX
இன்றைக்கு சுவையான கிரீன் மசாலா சுண்டல் மற்றும் கருப்பு எள் இட்லி பொடி ரெசிபிஸை வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கிரீன் மசாலா சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்.
கருப்பு கொண்டைக்கடலை -1/4 கிலோ.
எண்ணெய்-தேவையான அளவு.
உப்பு-தேவையான அளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
துருவிய தேங்காய்-1/4 கப்.
கொத்தமல்லி-1 கைப்பிடி.
தாளிக்க,
கடுகு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
எழுமிச்சை-1/4 மூடி.
கேரட்-1 கப்.
கிரீன் மசாலா சுண்டல் செய்முறை விளக்கம்.
முதலில் ¼ கிலோ கருப்பு கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதை குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி எண்ணெய்விட்டு 6 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் 2 வரமிளகாய், துருவிய தேங்காய் ¼ கப், கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி சேர்த்து தாளித்துவிட்டு 2 வரமிளகாய், கருவேப்பிலை சிறிதளவு, வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்த்துவிட்டு அதனுடன் துருவிய கேரட் 1 கப், அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து எழுமிச்சை ¼ மூடி பிழிந்துவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கிரீன் மசாலா சுண்டல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கருப்பு எள் இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்.
கருப்பு எள்-1 கப்.
கருப்பு உளுந்து-1/2 கப்.
வெள்ளை உளுந்து-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-15.
கருவேப்பிலை-1 கைப்பிடி.
உப்பு-1 தேக்கரண்டி.
பூண்டு-10.
புளி-நெல்லிக்காய் அளவு.
கருப்பு எள் இட்லி பொடி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 1 கப் கருப்பு எள் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அதே கடாயில் ½ கப் கருப்பு உளுந்து, 1 தேக்கரண்டி வெள்ளை உளுந்து சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதே கடாயில் 15 வரமிளகாயை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கருவேப்பிலை 1 கைப்பிடி உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது 10 பூண்டு, புளி நெல்லிக்காய் அளவு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.
இப்போது வறுத்து வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் முதலில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அத்துடன் எள்ளை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கருப்பு எள் இட்லி பொடி தயார். எப்போதுமே ஒரே இட்லி பொடி செய்யாமல் இப்படி வித்தியாசமான பொடியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.