ARTICLE AD BOX
Woman chief ministers of Delhi: நாட்டின் தலைநகரான டெல்லியில் புதிய முதல் அமைச்சராக ரேகா குப்தா நாளை பதவியேற்க உள்ளார். டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். அவருக்கு முன்பாக டெல்லியை ஆட்சி செய்த மூன்று பெண் முதல்வர்கள் யார் என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.

50 வயதான ரேகா குப்தா முதல் முறையாக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல் தடவையிலேயே முதல்வர் பதவியை எட்டிப் பிடித்துள்ளார். ஆனால், ரேகா பாஜகவில் பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்தைக் கடந்து வந்துள்ளார்.

செப்டம்பர் 2024 இல், அரவிந்த் கெஜ்ரிவாலின் எதிர்பாராத ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முக்கியத் தலைவரான அதிஷி, டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

1998 முதல் 2013 வரை தலைநகரை ஆட்சி செய்த ஷீலா தீட்சித், டெல்லியின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த அவர், டெல்லியின் உள்கட்டமைப்பு, பொது சேவைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டில் மகத்தான மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

1998 ஆம் ஆண்டு டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் பதவியேற்று வரலாறு படைத்தார். ஆனால், ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே அவர் முதல்வராக இருந்தார்.