ARTICLE AD BOX
சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா?.. அந்த நடிகைக்கு என்ன தொடர்பு.. சிபிஐ சொல்வது என்ன?
மும்பை: தோனி படத்தின் மூலம் பிரபலமடைந்த சுஷாந்த் சிங், மரணம் மிகப்பெரிய கேள்வியை உருவாக்கியது. கொலையா தற்கொலையா என்ற சந்தேகமும் அதிகரித்தது. இதில் ஒரு நடிகை பெயரும் அடிபட்டது. தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிபிஐ ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் (34). இவர் கடந்த
இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, தான் தங்கியிருந்த அபார்ட்மண்ட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். செய்தியறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சிபிஐ இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், அவரது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் இது தற்கொலை அல்ல கொலைதான் என வாதிட்டனர்.

நெப்போட்டிசம்: இந்த விவகாரதக்தில் பாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன. போதை மருந்து, நெப்போட்டிசம் என பல விவாதங்களை கிளப்பியது. இருப்பினும் அவரது மரணம் இன்று வரை மர்மமாக நீடித்து வருகிறது. இந்தி சினிமா உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கான் மற்றும் கபூர் குடும்பங்கள் தான் காரணம் என சொல்லப்பட்டது. எந்த பின்புலம் இல்லாமல் வளர்ந்து வந்த ஒரு இளைஞனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் தான் இந்த மரணம் என்றும் கூறப்பட்டது.
கொலை: இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் பிரேததத்தை உடற்கூறாய்வு செய்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல கொலை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்த செய்தி நாளொரு வண்ணம் வேறு விதமாக உருவெடுத்தது. இதன் பின்னர் அவரது காதலி என்று கூறப்பட்ட ரியா சக்ரபர்த்தியிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியது. சுஷாந்த் சிங்கின் தந்தை மற்றும் தந்தை என அனைவரும் ரியா மீது பலி சுமத்தினர்.

சிக்கிய நடிகை: ரியா சக்ரவர்த்தி, சுஷாந்தின் நண்பர் சித்தார்த், அவரது சமையல்காரர் நீரஜ் மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோரிடம் இருந்து சிபிஐ வாக்குமூலம் பெற்றது. சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிய ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா தலைமை தாங்கினார். ரியா சக்ரவர்த்தி சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி தனது கணக்கிற்கு மாற்றி கொண்டதாக சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
ஆனால், ரியாவின் மேலாளர் மற்றும் முன்னாள் வீட்டு மேலாளர் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.
ஒரு மாதகால விசாரணைக்கு பிறகு, ரியா சுஷாந்திடம் இருந்து பணம் கையாடல் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
பிரபலங்களிடம் விசாரணை: பின்னர், ரியாவின் செல்போனை சோதனை செய்தபோது போதை பொருள் தொடர்பான தகவல் பரிமாற்றம் நடந்திருப்பதை கண்டு சிபிஐ அதிர்ச்சியடைந்தது. அதைத்தொடர்ந்து ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷெளவிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சுஷாந்தின் மரணத்தில் பல திடுக்கிடு் சம்பவங்கள் வெளியானதை அடுத்து பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன், ராகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர். ஆனால், எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

சிபிஐ: சுஷாந்தின் தந்தை அளித்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இறுதி அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சீல் செய்யப்பட்ட கவரில் நேற்று சமர்பித்தது. இதில், சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்ரவர்த்திக்கும் அவரது குடும்பத்திற்கும் இதில் எந்த தொடர்பும் இல்லை, சமூகவலைதளங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. சுஷாந்தின் மரணத்தை கொலை என்று சந்தேகிக்க எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சிபிஐ தெரிவி்த்துள்ளது.