சுவையான‌ ராகி லட்டு மற்றும் கேரட் அல்வா எப்படி செய்கிறது பார்ப்போமா..!

4 days ago
ARTICLE AD BOX

-அகிலா சிவராமன்.

ட்டச்சத்துக்கள் நிறைந்த மற்ற தானியங்களைவிட இந்த ராகியில் 5 முதல் 30 மடங்கு அதிகமாகவே கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது நம் உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்கி எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல இந்த ராகியில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாக ராகி taste நிறைய பேருக்கு பிடிக்காது.

குழந்தைகளுக்கு இந்த லட்டை பண்ணி பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது கடையில் விற்கிற எண்ணெய் பண்டங்களுக்கு பதிலாக இதை கொடுத்தால் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.

வாங்க ராகி லட்டு செய்யலாம்:

முதலில் 2 cup (apriximate 2x 200 = 400g powder) ராகி பவுடரை  வெறும் வாணலியில் நனாறாக வறுத்து கொள்ளுங்கள். பிறகு அதே வாணலியில் 300g வெல்லத்தை இடித்து தண்ணீரில் போடவும். சிறிது கட்டியாகும் வரை கிளறவும். கம்பி பாகு தேவையில்லை. சிறிது கட்டியான பிறகு அரை cup காய்ச்சின பாலை ஊற்றி கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே பதமான ருசியான புட்டிங் செய்யலாமா?
delicious ragi laddu and carrot alva..!

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ராகி பவுடர், ஏலக்காய் பவுடர் மற்றும் dry fruits powder(மிக்ஸியில் பாதாம், பிஸ்தா முந்திரி பருப்பு இவற்றில் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை ஒரு பிடி போட்டு அரைத்து கொள்ளவும்) மற்றும் இரண்டு ஸ்பூன் நெய்யையும் 3 drops தேனையும் ஊற்றி நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். இந்த உருண்டை soft ஆகத்தான் இருக்கும். கீழே  படத்தில் இருக்கும் உருண்டை நான் என் வீட்டல் செய்த உருண்டை. ருசியாக இருக்கும்,  செய்து பாருங்கள்.

அடுத்தபடியாக கேரட் அல்வா:

பொதுவாக எல்லோரும் சர்க்கரை சேர்த்து கேரட் அல்வா செய்வார்கள். ஆனால் வெல்லத்தால் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முதலில் 1/2kg கேரட்டை துருவி அதை குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைக்கவும். பிறகு அடி தடிமனாக இருக்கும் ஒரு வாணலியில் 250g வெல்லத்தை தண்ணீரில் போட்டு சிறிது thick ஆன பிறகு 300 ml (boiled cream milk) பாலை ஊற்ற‌வேண்டும். பிறகு வேகவைத்த கேரட்டையும் போட்டு நன்றாக கிளறவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவ குணம் நிறைந்த சுண்டைக்காயில் உணவு வகைகள்!
delicious ragi laddu and carrot alva..!

200g நெய்யையும் ஊற்றவேண்டும். அல்வா பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளறவேண்டும். தீயை low வில் வைத்து கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து ஏலக்காய் பொடியை தூவி மேலே முந்திரி பருப்பை நெய்யில் வருத்து போடவும்.

சர்க்கரை சேர்க்காத காரணத்தினால் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இதை தாராளமாக சாப்பிடலாம்.

Read Entire Article