ARTICLE AD BOX
இன்றைக்கு சுவையான திருவையாறு அசோகா அல்வா மற்றும் ஹாட் டாக் ரெசிபஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - ½ கப்.
நெய் - 1/2 கப்.
சர்க்கரை - 1 கப்.
முந்திரிப் பருப்பு - 10.
கோதுமை மாவு - 2 தேக்கரண்டி.
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.
ஆரஞ்ச் புட் கலர் - சிறிதளவு.
அசோகா அல்வா செய்முறை விளக்கம்:
முதலில் பாசிப்பருப்பு ½ கப்பை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இப்போது குக்கரை நன்கு விசில் வரும்வரை வைத்து பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது பாசிப்பருப்பை மிக்ஸியில் அரத்து கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் சிறிதளவு ஊற்றி முந்திரிப்பருப்பு 10 வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது அதே கடாயில் கோதுமை மாவு 2 தேக்கரண்டியை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வறுத்த பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடம் கிளறிய பின்னர் அதில் சர்க்கரை 1 கப்பை சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது இந்த கலவை கெட்டி பதத்திற்கு வந்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிவிடவும்.
இப்போது நிறத்திற்காக ஆரஞ்ச் புட் கலர் சிறிதை சேர்த்து கிளறிவிடவும். கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு 10, ஏலக்காய்ப் பொடி சிறிதளவு, நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான திருவையாறு அசோகா அல்வா தயார்.
ஹாட் டாக் செய்ய தேவையான பொருட்கள்:
ஹாட் டாக் பன் - 4
சீஸ் ஸ்லைஸ் - 2
கொத்தமல்லிச் சட்னி - 2 தேக்கரண்டி.
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பனீர் - தேவையான அளவு.
வெண்ணெய் - 1 தேக்கரண்டி.
ஹாட் டாக் செய்முறை விளக்கம்:
முதலில் ஹாட் டாக் பன்னை குறுக்குவாட்டில் வெட்டி அதற்குள் லேசாக வெண்ணெய்யை தடவவும். அதன் மீது கொத்தமல்லிச் சட்னியை தடவவும். அதன் மீது சீஸை வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், பனீர் ஆகியவற்றை சிறிதளவு வைத்து கையால் அழுத்தி மூடவும். இதுப்போலவே எல்லா பன்களையும் செய்துக் கொள்ளவும். கொத்தமல்லிச் சட்னிக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தலாம். இப்போது இந்த பன்களின் மீது வெண்ணெய் தடவி கடாயில் வைத்து மூடிவைத்து 5 நிமிடம் வேகவைத்த பிறகு எடுத்து பரிமாறினால், சுவையான ஹாட் டாக் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.