சுவையான கத்தரிக்காய் பிரியாணி... சில நிமிடங்களில் செய்வது எப்படி?

4 days ago
ARTICLE AD BOX

சைவ பிரியர்களுக்கு பிடித்த கத்தரிக்காய் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக பிரியாணி என்றால் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாகும். அதிலும் அசைவ பிரியர்களின் உணவாகவே பிரியாணி இருக்கின்றது.

தற்போது சைவ பிரியர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் கத்தரிக்காயில் பிரியாணி எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 8 முதல் 10 வரை
பெரிய வெங்காயம் - 2
பாசுமதி அரிசி - ஒரு கப்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
எலுமிச்சை பழம் - 1
தேவையான‌ அள‌வு - உப்பு
ம‌ஞ்ச‌ள் தூள் - கால் ஸ்பூன்
க‌றிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
ப‌ட்டை - 1
கிராம்பு - 3
ப்ரிஞ்சி இலை - 1
ஏல‌க்காய் - 4
புதினா - ஒரு கொத்து
கொத்த‌ம‌ல்லித் தழை - ஒரு கொத்து

பிரியாணி மசாலா செய்ய 

பச்சை மிளகாய் - 4 முதல் 6
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை

முதலில் கத்தரிக்காயில் உள்ள காம்பை நீக்கிவிட்டு, நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். பிரியாணிக்கு கொடுக்கப்பட்ட அரிசியை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பிரியாணி மசாலா செய்வதற்கு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சொம்பு ஆகியவற்றை போட்டு வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில்  எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் பிரியாணி இலையை போட்டு வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

தொடர்ந்து கத்தரிக்காயை போட்டு சில நிமிடங்கள் வதக்கி, புதிய மல்லி தழைகளை சேர்க்கவும். பின்பு தேவையான உப்பு, தேங்காய் பால் சேர்க்கவும்.

பின்பு அரிசியை தண்ணீர் வடித்துவிட்டு குக்கரில் சேர்த்து, அதன் மீது எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் மூடி வைத்து, ஆவி வந்ததும் வெய்ட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். பின்பு சாதம் உடையாமல் கிளறிவிட்டால் சுவையான கத்தரிக்காய் பிரியாணி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

  

Read Entire Article