ARTICLE AD BOX

image courtesy: PTI
பாசெல்,
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க்கின் ஜூலி டாவல் ஜேக்கப்சன் உடன் மோதினார்.
இந்த போட்டியில் அனுபவம் வாய்ந்த பி.வி.சிந்து எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 17-21, 19-21 என்ற நேட் செட் கணக்கில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி கண்டார். பி.வி. சிந்துவை வீழ்த்திய ஜூலி டாவல் ஜேக்கப்சன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.