சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவர புறப்பட்ட ராக்கெட்!

3 hours ago
ARTICLE AD BOX

பல காலமாக விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டுவர ராக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது.

எலோன் மஸ்க்கிற்கு போட்டியாக வந்த போயின் நிறுவனம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப 'ஸ்டார்லைனர்' எனும் விண்கலத்தை தயார் செய்திருந்தது. அதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புட்ச் வில்மோர் ஆகியோர் பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தனர்.

அங்கு ஆய்வை முடித்த பிறகு 10 நாட்களில் திரும்ப வேண்டும் என்பதுதான் ப்ளான். ஆனால், சென்ற ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை. ராக்கெட்டில் மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அந்த பிரச்சனையை சரி செய்ய இருவரும் இதுவரை முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், முடியவில்லை. ஆட்கள் இல்லாமல் வெறும் ஸ்டார்லைனர் மட்டும் பூமிக்கு திரும்பியது. இதனால் இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளியிலேயே சிக்கிக்கொண்டனர். இன்னும் அவர்கள் எப்போது வருவார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது.

அங்கு இருந்துக்கொண்டு சுனிதா வில்லியம்ஸ் ஒரு சாதனை கூட செய்தார்.

ரேடியோ தொலைத்தொடர்பு சீரமைப்பு பணிகளுக்காக விண்வெளியில் ஸ்பேஸ்வாக் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் சுமார் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் விண்வெளியில் மிதந்துள்ளார். இதுவரை 9 முறை ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் ஸ்பேஸ்வாக் செய்துள்ளார்.

பலமுறை அவர்களை பூமிக்கு அழைத்துவர முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அவை எந்தவித பலனும் அளிக்கவில்லை.

இப்படியான நிலையில், எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு ராக்கெட் செலுத்த தீர்மானித்தது. இன்று, ப்ளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இன்று அதிகாலை 4:33 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், விரைவில் சுனிதா மற்றும் வில் மோர் ஆகிய இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் என கூறப்படுகிறது.

உலகமே சுனிதா வில்லியம்ஸ் வருகைக்குதான் காத்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மாலை வேளையில் அவ்வப்போது கொறிக்க இனிப்பு, கார பிஸ்கட் வகைகள்!
Sunita Williams
Read Entire Article