சுனிதா வில்லியம்சின் சாதனை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்: செல்வப்பெருந்தகை

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், தனது முதல் பயணத்தில் விண்கலத்தை இயக்கிய முதல் பெண் என்ற வரலாற்று சாதனை படைத்தவர். இன்று அவர் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமியில் கால் பதித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான சோதனை நேரத்திலும் உறுதியாக இருந்து அவர் சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Read Entire Article