ARTICLE AD BOX
பிரிட்டிஷ்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா மாகாணங்களையும், சுதேச மாநிலங்களையும் பெற்றது. ஏராளமான மாநிலங்கள் ராஜதந்திரம் மற்றும் இராணுவ நடவடிக்கை மூலம் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1950ல் தெற்கு மற்றும் கிழக்கு ஆந்திரப் பகுதி மெட்ராஸ் பிரசிடென்சி ஒருங்கிணைக்கப்பட்டது.
அதே நேரத்தில் தெலுங்கானா பகுதி ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஆந்திரர்களின் தனி மாநில கோரிக்கை மிகவும் தீவிரமாக வளர்ந்தது. உள்ளூர் தலைவர் பொட்டி ஸ்ரீராமுலு, 1952 இல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இறுதியில் அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தது. 1953ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதுதான் சுதந்திர இந்தியவில் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் ஆகும்.
பின்பு மெட்ராஸ் பிரசிடென்சியுடன் இருந்த தெலுங்கு பேசும் மாவட்டங்கள் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து 1956ம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு மொழி பேசும் மாவட்டங்கள் நவம்பர் 1, 1956 அன்று ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
பழைய மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளை ஒன்றிணைத்து 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தான் ஆந்திரப் பிரதேசம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேச உருவாக்கம் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் பிற மாநிலங்களை உருவாக்குவதை ஊக்குவித்தது. இது இந்தியாவின் அரசியல் எல்லைகளை மறுவடிவமைத்தது.
பின்பு சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் கலாச்சார மற்றும் மொழியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மொழி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தான் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், கேரளா, பீகார் என பல்வேறு மாநிலங்கள் உருவாகின. இந்தியாவின் முதல் மாநிலமான ஆந்திர பிரதேசம் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கண்டுள்ளது.
மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியம், துடிப்பான திருவிழாக்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தன. இந்தியாவில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு ஆந்திர பிரதேசம் தான் இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமாக விளங்கி வந்தது. இதனால் ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேசம் ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டன. இந்தியாவில் இப்போது 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.