ARTICLE AD BOX
கறிவேப்பிலைக்கு என பிரத்தியேக மனம் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் பயன்படுகிறது. பெரும்பாலும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அதன் தாக்கத்தால் இணை நோய்கள் ஏற்படக் கூடும். இந்நிலையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் கறிவேப்பிலை பொடி எவ்வாறு செய்ய வேண்டும் என தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை,
உருட்டு உளுந்து,
கடலை பருப்பு,
கொத்தமல்லி,
மிளகு,
சீரகம்,
வரமிளகாய்,
பெருங்காயத்தூள் மற்றும்
உப்பு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில், தேவையான அளவு கறிவேப்பிலைகளை போட்டு வறுக்க வேண்டும். இதன் பின்னர், கறிவேப்பிலைகளை தனியாக எடுத்துக் கொள்ளலாம். இப்போது அதே பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உருட்டு உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் மற்றும் வரமிளகாய்கள் சேர்த்து வறுக்க வேண்டும்.
இதையடுத்து, இவற்றுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்க வேண்டும். இவை நன்றாக பொடியானதும் சிறிதளவு உப்பு மற்றும் முதலில் வறுத்து வைத்திருந்த கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் பொடியாக அரைக்க வேண்டும்.
இப்படி செய்தால் சுவையான கறிவேப்பிலை பொடி தயாராகி விடும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
நன்றி - Good2Day Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.