சீமான் வீட்டு பாதுகாவலரிடம் கைத்துப்பாக்கி… போலீசாருடன் வாக்குவாதம்… 2 பேர் கைது!

3 hours ago
ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற காவல் துறையினரை தாக்கிய வீட்டு பாதுகாவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வைத்திருந்த துப்பாக்கிய போலீசார் கேட்டபோது தர மறுத்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், திருமண மோசடி செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, சீமான் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என, சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் நேரில் ஆஜர் ஆகவில்லை. சீமான் தரப்பில் வழக்கறிஞர் ஆஜர் ஆகி கால அவகாசம் கோரினார்.

இந்நிலையில், நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலயத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுக்க போலீசார் சென்றனர்.

அப்போது அந்த சம்மனை சீமான் வீட்டின் கதவில் ஒட்டியுள்ளனர். நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் போலீசார் ஒட்டிய சம்மன் சில நிமிடங்களிலேயே கிழிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சீமான் வீட்டின் கதவை திறக்க கோரினார். அப்போது காவல்துறை தரப்பில் எதற்காக சம்மன் ஒட்டிய சில நிமிடங்களில் கிழித்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது, திடீரென போலீசார் மற்றும் சீமானின் பாதுகாவலர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது.

ஒரு கட்டத்தில் சீமானின் பாதுகாவலர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டியதால், போலீசார் அதிர்ந்துள்ளனர். இதன்பின் 2 போலீசார் இணைந்து உடனடியாக சீமானின் பாதுகாவலரை குண்டுக் கட்டாக போலீஸ் வேனுக்கு தூக்கிச் சென்றனர். அவரிடம் இருந்து கைத் துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றினர்.

இதனால் சீமான் வீட்டில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த சீமானின் மனைவி கயல்விழி, உடனடியாக மன்னிப்பு கோரியுள்ளார். அப்போது எதற்காக சம்மனை கிழித்தீர்கள் என்ற கேள்விக்கு, கயல்விழி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் அளித்த சம்மனை கிழித்தவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணையில், கைத் துப்பாக்கியை போலீசாரை நோக்கி நீட்டியவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது. அவரின் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read Entire Article