ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பிரபல நடிகை கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்பு புகாரை வாபஸ் பெற்ற அந்த நடிகை மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி இருந்த சீமான், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதே வேளையில் வழக்கை ரத்து செய்யக்கூடாது என போலீஸ் தெரிவித்து இருந்தது. இந்த வழக்கில் சீமான் தரப்பு மற்றும் போலீசின் வாதங்களை கேட்ட உயர்நீதிமனற நீதிபதி இளந்திரையன், ''விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்றரீதியில் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது'' என்று கூறி சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டார்.
மேலும் சீமான் மீதான வழக்கை 12 மாத காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சீமான் இன்று ஆஜாராக போலீஸ் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் இன்று நேரில் ஆஜராகவில்லை. இதனால் ''நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையெனில் கைது செய்ய நேரிடும்'' என்று சீமான் வீட்டில் போலீசார் நோட்டீஸ் ஒட்டினார்கள்.
சீமானுக்கு போலீசார் விதித்த 10 நிபந்தனைகள்.! மீறினால் அவ்வளவு தான்- தேதி குறித்த காவல்துறை
இதற்கிடையே சீமான் மீது புகார் அளித்த நடிகை மீது பெங்களூருவில் இருக்கும் நிலையில், வளசரவாக்கம் போலீசார் நேற்று பெங்களூரு சென்று விசாரணை நடத்தினார்கள். சீமானின் வற்புறுத்தலினால் 7 முறை அந்த நடிகை கருக்கலைப்பு செய்துள்ளார் எனவும் அவரிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்றதாவும், சீமான் மிரட்டியதால் அந்த நடிகை புகாரை வாபஸ் பெற்றிருந்ததாகவும் உயர்நீநிமன்றம் தெரிவித்து இருந்தது. அதையும், கூடுதலாக சில தகவல்களையும் அந்த நடிகை போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் சீமானுக்கும், தனக்கும் இருந்த நெருக்கம் தொடர்பாக சில ஆதாரங்களையும் அந்த நடிகை வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் சீமானுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை போலீசார் சேகரித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை வளசரவாக்கம் போலீசில் சீமான் ஆஜராவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
போலீஸ் கையில் முக்கிய ஆதாரம்! விஜயலட்சுமியால் சிக்கல்- விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த சீமான்