ARTICLE AD BOX

சீன இராணுவத்தின் Southern Theater Command-க்கு சொந்தமான போர்விமானம், ஹைனான் பகுதியில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. பைலட் பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பினார், மேலும் தரையில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சீன கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த Southern Theater Command, தெற்கு சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது, இது பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளுடனான கடல் உரிமை மோதல்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது. சமீபத்தில், Scarborough Shoal பகுதியில் பிலிப்பைன்ஸ் கண்காணிப்பு விமானத்திற்கு மிக அருகில் சீன கடற்படை ஹெலிகாப்டர் வந்ததால், இந்த பிரச்சனை மேலும் மோசமாகியிருக்கிறது.