ARTICLE AD BOX
சீனாவில் புத்தாண்டை ஒட்டி விடப்பட்ட 40 நாள் விடுமுறை இன்றுடன் முடியும் நிலையில் நாடெங்கும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சீனா புத்தாண்டு கடந்த மாதம் 29ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
அதையொட்டி மக்கள் சொந்த ஊருக்கு செல்ல 40 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. ஜனவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கிய விடுமுறைக்காலம் பெரும் கொண்டாட்டங்களுக்கு பிறகு
இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பெய்ஜிங், ஷாங்காய் போன்ற
பெருநகரங்களுக்கு மக்கள் மீண்டும் திரும்புகின்றனர்.
விடுமுறைக்காலம் தொடங்கும் போது 2 கோடியே 15 லட்சம்
பயணச்சீட்டுகள் விற்பனையாகியிருந்தன. தற்போதும் அதே அளவு பயணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிது. கடந்த 40 நாட்களில் மட்டும் சீன ரயில்களில் 500 கோடி பயணங்கள் நடத்திருக்கும் என்றும் இது ஒரு உலக சாதனையாக
இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
பயணிகள் சுமுகமாக சென்று வர அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் சீனா கடைபிடித்திருந்தது. கப்பல், படகு ஆகிய நீர் வழிப்போக்குவரத்து மூலம் 3 கோடி பயணங்கள் நிகழ்ந்திருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 40 நாட்களில்
நாடெங்கும் 14 ஆயிரம் ரயில்கள், 6 லட்சத்து 50 ஆயிரம் பேருந்துகள், 4 ஆயிரத்து 100 விமானங்கள் பயணிகள்
போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டதாக சீன அரசுத்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.