ARTICLE AD BOX
சிவாலயங்களில் இரவு நடை சாற்றும் முன் சுவாமி - அம்பாளை பள்ளியறை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டுப்பாடி பூஜிப்பது பள்ளியறை பூஜை.
தமிழ்நாட்டின் 44,000 பழமையான சிவாலயங்களில் 36,000 ஆலயங்களில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்வரை பள்ளியறை பூஜை நடைபெற்றுள்ளது.
பல்லக்கில் ஈசனை கொண்டுவரும் போது, சிவபுராணம், பதிகங்கள் பாடுவர். இதை காண்போருக்கு புண்ணியமும் வளமான வாழ்வும் அமையும். பூஜைக்கு ஈசனைச் சுமந்து வருவோர் மறுபிறவியில் கல்விக்கும் செல்வத்திற்கும் அதிபதியாவார்.
பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும், காணாமல் போன துணைவர்கள் திரும்பி வரவும் அசுபதி நட்சத்திரம் சேர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.
திங்கட்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்போர் மகத்தான திட்டங்களை செயல்படுத்துவர். ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் ஒரு வருட காலம் செவ்வாய் தோறும் பூஜையில் கலந்து கொள்ள திருமணம் விரைவில் கூடிவரும்.
புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள பதவி உயர்வு கூடி வரும்.
அனைத்து விதமான சித்திகளும் கிடைக்க அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
கணவருடைய நீண்ட கால நோய் தீர, மனைவி வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்கவேண்டும்.
அற்புதமான வாரிசாக மகனையோ மகளையோ பெறவிரும்புவோர் சனிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி அவரவர் அன்பளிப்பாகத் தரவேண்டும்.
பூஜைக்குத் தேவையான பூக்கள், பால், நைவேத்தியம், எண்ணெய், நெய் தருவதும் மின் விளக்கு தானம் செய்வதும், பூக்கள் கட்டித் தருவதும் பெரும் புண்ணியத்தை தருவனவாகும்.
குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்.
பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங்கள் கொடுப்பவர்களுக்கு, ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தை பிறக்கும்.
பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்று, முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துவர, சுகப்பிரசவம் ஏற்படும். நைவேத்தியப் பாலை பலருக்கும் தர வலியில்லாத பிரசவம் உண்டாகும். குழந்தையும் இறை சிந்தனையுடன் பிறக்கும்.
இதனால் தாய்க்கு பிரசவ வைராக்கியத்திற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும். பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள். பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்.
பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக் காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது.
வெகு காலமாக திருமணம் நடக்காமல் இருக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் இதில் கலந்து கொள்ளவேண்டும்.
ஒரு வருடத்திற்குக் குறையாமல் கலந்து கொள்வதன் மூலமாக அவர்களுக்கு இனிமையான மண வாழ்க்கை அமையும்.
வேலை அல்லது தொழில் செய்து வருபவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையை தரிசித்து வருவதன் மூலமாக மூன்றாவது நாளில் இருந்து அல்லது மூன்றாவது வாரத்தில் இருந்து வேலையில் மந்தம் விலகிவிடும். தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம்.
பள்ளியறை பூஜை நடைபெறாத ஆலயங்களில் பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் துவங்குவதும் பெரும் கோடிக்கணக்கான கோடி புண்ணியத்தைத் தரும்...
அம்பாள், சிவனின் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்து செல்வாள். பால், பழங்கள் நெய்வேத்யமாக வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தி, பாசுரங்கள் பாடி திருக்கதவுகள் மூடப்படும். இந்த பள்ளியறை பூஜையானது கிட்டதட்ட அரை மணி நேரம் வரை நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொள்வதை விபரம் அறிந்த சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும்.... பலருக்கும் இந்த பூஜை பற்றி முழுவதுமாக தெரியாது.
என்ன பலன் கிடைக்கும்:
பள்ளியறை பூஜை நடக்கும் இடத்தை தூய்மையான தண்ணீரால் சுத்தம் செய்து, கோலமிட்டு, அழகுபடுத்துதலை வழக்கமாக பல பெண்களும் செய்து வருகிறார்கள். இந்த பள்ளியறை பூஜைக்கு கோலமிட்டு வணங்கினால் மகாலட்சுமி அவர்களுடைய இல்லத்திலும், உள்ளத்திலும் நிரந்தரமாக வாசம் செய்வாள். அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கக் கூடிய எல்லா விதமான நலன்களும் கிடைக்கும்.
யார் இதைச் செய்கின்றார்களோ, அவர்கள் மற்றும் அவர்களுடைய அடுத்த பதினான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இனிமையான இல்லறத்தை தமது வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள் என்பதை அகத்தியர் மாமுனிவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
திருச்சிற்றம்பலம்