சிவராத்திரி நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்னென்ன?

2 days ago
ARTICLE AD BOX

சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

2. மணம் மிகுந்த மலர்களை சிவபெருமானின் உச்சி முதல் கால் வரை தூவ வேண்டும். தூவும் பொழுது நம சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

3. மந்திரம் ஓதிக் கொண்டே சிவபெருமானை வலம் வந்து வணங்கவேண்டும்.

4. சிவாலய வளாகத்தை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடை அணிவிக்க வேண்டும்.

7. எருக்க மலர் மாலைகளை சிவபெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏந்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

9. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.


Read Entire Article