சில நாட்கள்தான்.. ரெடியா இருங்க.. விரிவாக்கப்படும் மகளிர் உரிமை தொகை.. யாரெல்லாம் சேரலாம்?

3 hours ago
ARTICLE AD BOX

சில நாட்கள்தான்.. ரெடியா இருங்க.. விரிவாக்கப்படும் மகளிர் உரிமை தொகை.. யாரெல்லாம் சேரலாம்?

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த சில நாட்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

பின்வரும் பிரிவை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

1. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும்.

2. புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்

3. கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்

4. தவறான காரணங்கள் பெயர் விடுபட்டவர்கள்.

5. அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.

Tamil Nadu Government Notification ration magalir urimai thogai

எப்போது வழங்கப்படும்:

3 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் சில வாரங்களில் இதற்கான வேலைகள் துவங்கும்.. புதிய விண்ணப்பங்களை ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

மகளிர் உரிமை தொகை:

புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இனி புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தால்.. அந்த விண்ணப்பங்கள் ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பே பதால் அளித்திருந்தார். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம்.

எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றுகூறப்படுகிறது .

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் விளக்கம்: ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும் என்று விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 'மகளிர் உரிமைத்தொகை' என பேசியதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
English summary
Who will get the Magalir Urimai Thogai Rs.1000 once it get expanded
Read Entire Article