சிறைச்சாலையில் கோழிப்பண்ணை! கைதிகளுக்கு கோழிக்கறி! அரசுக்கு ரூ.10 கோடி மிச்சம்!!

3 hours ago
ARTICLE AD BOX

வேலூர் மத்திய சிறை வளாகத்துக்குள், சிறைக் கைதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் கோழிக்கறி வழங்குவதை எளிதாக்க, கோழிப்பண்ணை தொடங்கப்பட்டு, தற்போது அது பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

வேலூர் மத்திய சிறையில், கைதிளால் நடத்தப்படும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளை, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சேவை ஒரு சில நாள்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாடு சிறைத் துறை சார்பில், சிறைக் கைதிகளுக்குத் தேவையான கோழிக்கறியை தங்களே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழகத்தில் ஒரு சில சிறை வளாகங்களுக்குள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கோழிப் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தில் இரண்டு நாள்கள் சிறைக் கைதிகளுக்கு கோழிக்கறி வழங்குவதை எளிமையாக்கவும், சிறந்த கோழிக்கறி கிடைக்கும் வகையிலும் அதனை வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் ரூ.10 கோடி செலவினத்தை மிச்சம் பிடிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது, இந்த திட்டம் சிறப்பாக செயல்பாட்டுக்கு வந்து, கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள், சிறைக் கைதிகளுக்குப் போக, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்கட்டமாக முழுக் கோழியும், கறியாகவும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

சிறை அதிகாரிகள் மேற்பார்வையில், சிறைக் கைதிகளால், இந்த கோழிப்பண்ணையில் இருக்கும் கோழிகள் பராமரிக்கப்படுவதாகவும், 145 கிலோ கோழிக்கறி ஆண்கள் சிறைப் பிரிவுக்கும், 12 கிலோ கோழிக்கறி பெண்கள் சிறைப் பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சிறைக் கைதிகளுக்கு சமைத்த கோழிக்கறி வழங்கப்படுகிறது.

முதலில் சிறைக் கைதிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த கோழிப்பண்ணையில் தற்போது 40 சதவீதம் கோழிக்கறி சிறைக் கைதிகளுக்கும், 60 சதவீதம் கோழிக்கறி விற்பனைக்கும் கொண்டு செல்லப்படும் வகையில் வளர்ச்சியடைந்திருப்பது சிறைத் துறையினருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Read Entire Article