ARTICLE AD BOX
Youtuber Divya Kallachi Arrested in The Thug Act : தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களை பெரும்பாலானார் நல்ல செயல்களுக்கு பயன்படுத்தி வந்தாலும், சிலர் இவற்றை தவறாக பயன்படுத்தி பிரபலமாகி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் திவ்யா கள்ளச்சி. யூடியூப் மூலமாக பிரபலமாகிறேன் என்ற பெயரில் வரம்பு மீறி வீடியோக்களை பதிவிட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
தனெக்கான ஒரு யூடியூப் சேனல் தொடங்கிய அவர் ஆபாச பேச்சுகள், செய்கைகள் என வித்தியாசமாக என்னென்னமோ பேசி யூடியூப், இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு மாதம்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்து வந்தார். இவரின் அருவருக்கத்தக்க பேச்சு மற்றும் செய்களைகளை ரசிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது.
அதிரடி கைது:
திவ்யா கள்ளச்சி ஆபாசமாக பேசி வருகிறார் என தொடர்ந்து குற்றம்சாட்டபப்ட்டு வந்த நிலையில், திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்டவர்கள் சிறார்கள் வைத்து ஆபாச படம் எடுப்பதாக சித்ரா என்ற யூடியூபர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திவ்யா கள்ளச்சி, சித்ரா ஆகியோரும் அவர்களுக்கு உடைந்தையாக இருந்த ஆனந்த், கார்த்தி என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஶ்ரீவைகுண்டம் அருகே பஸ்ஸை மறித்து பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
அதாவது சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களும் சமூகவலைத்தளங்களில் திவ்யா கள்ளச்சியிடம் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சிறுவர்களை சந்திக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த திவ்யா கள்ளச்சி அவர்களை விடுதிக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை வீடியோகாவும் பதிவு செய்துள்ளார். திவ்யா கள்ளச்சி சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாக கூறிய மற்றொரு யூடியூபர் சித்ராவும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்துள்ளார்.
அதிர வைக்கும் பின்னணி
அந்த சிறுவர்களின் பெறோர்கள் கொடுத்த புகாரின்பேரில் திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஈரோட்டை சேர்ந்த கார்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஆனந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திவ்யா மீதும், சித்ரா மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில், கைதான திவ்யா கள்ளச்சி உள்ளிட்டோர் சிறையில் இருக்கும் நிலையில் திவ்யா, கார்த்தி மற்றும் சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் பரிந்துரை செய்த நிலையில் அவர்கள் மூவரையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குண்டச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
திவ்யா கள்ளச்சியின் இன்னொரு முகம்; சிறுவர்களை வைத்து... அதிர வைக்கும் பின்னணி!