தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது முதியவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் பகுதியில், 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த, 61 வயது முதியவர் மீதான புகாரை விசாரித்த அனைத்து மகளிர் போலீசார் அந்த முதியவரை போக்சோ வழக்கில், கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெபருல்லா (61) தச்சு தொழிலாளி. இவரது வீட்டின் அருகே கடந்த 14ம் தேதி, 9 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாத நிலையில் ஜெபருல்லா அந்த 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுவனின் வாயை பொத்தி, பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்த அந்த சிறுவனிடம் ஜெபருல்லா இதனை வெளியே சொன்னால், கத்தியால் கழுத்து அறுத்து விடுவேன் எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் அந்த சிறுவன் மேலும் பயந்து போய் உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக அந்த சிறுவன் சோர்வாகவே இருந்துள்ளார். இதை பார்த்த சிறுவனின் தாய், சந்தேகமடைந்து விசாரித்போது, சிறுவன் தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறி தாயிடம் அழுதுள்ளார். இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர், நேற்றுமுன்தினம் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இதன் பேரில், திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தினர். இதில் ஜெபருல்லா அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெபருல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண் குழந்தைகள் மட்டுமின்றி, ஆண் குழந்தைகளும் தற்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது காலம் கலிகாலமாக மாறிக் கொண்டு வருகிறதோ என்ற அச்ச உணர்வை இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் பள்ளிக்கு சென்ற 3ம் வகுப்பு மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் சம்பவங்கள் நடப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.