சிறு வீடியோக்களின் ராஜ்ஜியம்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தனி ஆப் ஆக மாறுமா?

22 hours ago
ARTICLE AD BOX

இன்றைய உலகில், குறுகிய வீடியோக்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிக்டாக் என்ற செயலி இந்த புரட்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் இந்த குறுகிய வீடியோக்களில் மூழ்கி, தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர். சிரிப்பு, நடனம், சமையல், செய்திகள் என அனைத்து விதமான உள்ளடக்கங்களையும் இந்த தளங்களில் விரல் நுனியில் பார்த்து ரசிக்க முடிகிறது.

இந்த ட்ரெண்டை உணர்ந்து, இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரீல்ஸ் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. ரீல்ஸ் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற டிக்டாக் செயலிக்கு போட்டியாக ரீல்ஸ் உருவெடுத்தது. இப்போது, சமூக வலைத்தள உலகில் ஒரு புதிய செய்தி பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரீல்ஸை ஒரு தனியான ஆப் ஆக வெளியிட யோசித்து வருகிறது என்பது தான் அந்த செய்தி.

டிக்டாக் செயலி அமெரிக்காவில் சில சிக்கல்களை சந்தித்து வருவதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள இன்ஸ்டாகிராம் விரும்புவதாக கூறப்படுகிறது. டிக்டாக் போன்றே, ரீல்ஸ் ஆப்-பிலும் வீடியோக்களை ஸ்க்ரோல் செய்யும் அனுபவத்தை பயனர்கள் பெற முடியும். மெட்டா நிறுவனத்திற்கு இது புதிதல்ல. 

இதையும் படியுங்கள்:
திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. இனி வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட்!
Instagram reels

ஏற்கனவே, லஸ்ஸோ என்ற வீடியோ ஷேரிங் ஆப்-ஐ மெட்டா நிறுவனம் முயற்சி செய்து பார்த்தது. ஆனால் அந்த ஆப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, இப்போது எடிட்ஸ் என்ற புதிய வீடியோ எடிட்டிங் ஆப்-ஐ மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிக்டாக் நிறுவனத்தின் கேப் கட் ஆப்-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.

ரீல்ஸ் தனி ஆப் ஆக வெளிவந்தால், அது டிக்டாக்-க்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில், இன்ஸ்டாகிராம் ஏற்கனவே ஒரு பெரிய பயனர் தளத்தை கொண்டுள்ளது. ரீல்ஸ் தனி ஆப் ஆக மாறினால், குறுகிய வீடியோ சந்தையில் போட்டி இன்னும் அதிகரிக்கும். பயனர்களுக்கு அதிக ஆப்ஷன்கள் கிடைக்கும். கிரியேட்டர்களுக்கு புதிய தளங்கள் உருவாகும். ஆனால், இது வெறும் யூகமா? இல்லை உண்மையா? இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வீடியோ வீழ்த்திய விவாகரத்து!
Instagram reels

சிறு வீடியோக்களின் ராஜ்ஜியம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது. இந்த ராஜ்ஜியத்தில் யார் முடி சூட்டப்போவது? டிக்டாக்கா? இன்ஸ்டாகிராம் ரீல்ஸா? இல்லை வேறு புதிய போட்டியாளர்கள் வரப்போகிறார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Read Entire Article