ARTICLE AD BOX
சிறப்பு FD டூ UAN செயல்படுத்தல் வரை!. இதற்கெல்லாம் மார்ச் 31 வரைதான் காலக்கெடு!.
மார்ச் 31 முதல் 2023-24 ஆம் நிதியாண்டு முடியும் வேளையில், 2025-26 புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்குகிறது. வரி சேமிப்பை மேம்படுத்த, சிறப்பு நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்ய, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்புடைய காப்பீட்டுத் திட்டத்திற்கு (ELI) UAN செயல்படுத்துவதற்கான முக்கிய நிதி பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இது நிதி திட்டமிடலை சரியாக செய்வதை உறுதி செய்ய உதவும். 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வரும் நிலையில், வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கியமான நிதிப் பணிகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 6.50% லிருந்து 6.25% ஆக 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்ததைத் தொடர்ந்து, பல வங்கிகள் தங்கள் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, பல வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அதிக வட்டி விகிதங்கள் வழங்கும் சிறப்பு நிலையா வைப்பு(FD) திட்டங்களை வழங்கி வருகின்றன. இருப்பினும், அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததைத் தொடர்ந்து, இந்த சிறப்பு FDகள் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

அதிக வருமானத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் இந்தத் திட்டங்கள் முடிவடைவதற்கு முன்பு முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது SBI, இந்தியன் வங்கி, IDBI வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவை இந்த சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வரி சேமிப்பு முதலீடுகள்: நீங்கள் பழைய வரி முறையை தேர்வு செய்திருந்தால், வரும் மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக, உங்கள் வரிச் சேகரிப்பு வருமானத்தை குறைக்க வரி சேமிப்பு விருப்பங்களில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், வருமானவரி சட்டம் பல முக்கியமான விலக்குகளை வழங்குகிறது. அதில், தேசிய ஓய்வு காப்பீட்டு அமைப்பு (NPS), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகை (ஐந்து வருட லாக்-இன் உடன்) மற்றும் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) உள்ளிட்ட பல முக்கியமான விலக்குகள் வழங்கப்படுகின்றன.
ITR தாக்கல் செய்தல் அல்லது புதுப்பித்தல்: நீங்கள் முன்பு தாக்கல் செய்த ITR-இல் தவறு செய்திருந்தாலோ அல்லது ஏதேனும் வருமானத்தை தவிர்த்திருந்தாலோ, நீங்கள் திருத்தம் செய்வதற்காக புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை (ITR-U) தாக்கல் செய்யலாம். உங்கள் ITR-U ஐ தாக்கல் செய்ய குறைந்தது இரண்டு ஆண்டுகள் உங்கள் பொருத்தமான மதிப்பீட்டு ஆண்டின் முடிவிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட வருமானவரி திருப்பி தாக்கல் செய்ய கடைசி தேசி மார்ச் 31, 2025 ஆகும்.
(EPF) இணைக்கப்பட்ட காப்பீட்டுக்கான (ELI) UAN செயல்படுத்தல்: EPF உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கை ஆன்லைனில் அணுகி, நிர்வகிக்க யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்த வேண்டும். EPF அதன் உறுப்பினர்களுக்கு ஊழியர் வைப்பு தொடர்புடைய காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. EDLI(Employees' Deposit Linked Insurance) திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற UAN-ஐ மார்ச் 15, 2025-க்குள் செயல்படுத்த வேண்டும்.
சிறப்பு நிலையான வைப்புத்தொகை(Special fixed deposit) காலக்கெடு: SBI Amrit Vrishti: பொதுமக்களுக்கு SBI இன் Amrit Vrishti-திட்டத்தின் கீழ் 444 நாட்கள்" என்ற சிறப்பு தவணை திட்டம் 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது, மேலும் மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 7.75% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மார்ச் 31, 2025 வரை செல்லும்.
SBI Amrit Kalash: பொதுமக்களுக்கு SBI இன் Amrit Kalash- திட்டத்தின்கீழ் "400 நாட்கள்" என்ற சிறப்பு கால திட்டம் 7.10% வட்டியை வழங்குகிறது; முதியவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 7.60% வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மார்ச் 31, 2025 வரை செல்லுபடியாகும்.
IDBI வங்கி: Utsav என்ற நிலையான வைப்பு நிதி திட்டம் என்பது, வட்டி விகிதங்கள் காலாவதி காலத்திற்கு ஏற்ப மாறும் ஒரு சிறப்பு FD திட்டமாகும். உத்சவ் FDயில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.
இந்தியன் வங்கி: Supreme 300 நாட்கள் மற்றும் IND சூப்பர் 400 நாட்கள் என்ற சிறப்பு நிலையான வைப்பு (FD) திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு 8.05% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.