சிறகடிக்க ஆசையில் உடைய இருக்கும் பலநாள் ரகசியம்… இனியாவிற்கு கல்யாணமா?

11 hours ago
ARTICLE AD BOX

Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான ப்ரோமோக்கள்.

சிறகடிக்க ஆசை: மீனா தன்னுடைய டெக்கரேஷன் பிசினஸில் சிந்தாமணியிடம் சிக்க இருந்த நிலையில் புத்திசாலிதனமாக பிளான் போட்டு அதிலிருந்து தப்பி இருக்கிறார். இந்நிலையில் அடுத்த வாரம் பரமு வீட்டு திருமணம் நடக்க இருக்கிறது.

இதில் அண்ணாமலை வீட்டில் இருந்து எல்லோரும் கலந்து கொள்ள அவர்கள் கறிக்கடைக்காரரை பார்ப்பாரா என ரசிகர்களிடம் ஆவல் எழுந்திருக்கிறது. இந்நிலையில் முத்துவின் நண்பரான செல்வம் தன்னுடைய மனைவியுடன் அவர் வீட்டிற்கு வருகிறார். 

 

அவரை சாப்பிட சொல்ல அந்த நேரத்தில் மனோஜ் என்னுடைய வீட்டில் நான் காத்திருந்து சாப்பிட வேண்டுமா என சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். இதில் கடுப்பான முத்து அவரிடம் சண்டைக்கு போக ஒரு கட்டத்தில் மனோஜ் நீ ஜெயிலுக்கு போனவன் தானே என சத்தம் போடுகிறார்.

இதை கேட்கும் மீனா முத்துவிடம் இது குறித்து பேசுகிறார். முத்து அமைதியாக இருக்கிறார்.வெகு நாட்களாகவே முத்துவின் ஃப்ளாஷ் பேக் குறித்த காட்சிகள் இன்னும் ஒளிபரப்பு செய்யப்படாமல் இருக்கிறது. அது வெளியானால் எதற்காக விஜயா முத்துவை வெறுக்கிறார் என்றும் தெரியலாம் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பாக்கியலட்சுமி: கிளைமாக்ஸ் நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் தற்போது இனியாவின் காதல் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இனியா செல்வியின் மகன் ஆகாஷை விரும்பி இருக்க இருவரையும் படிக்குமாறு பாக்யா அறிவுரை சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் ஈஸ்வரி இனியாவிற்கு மாப்பிள்ளை பார்த்து விட இதனால் பாக்கியா கோபமாகி சத்தம் போடுகிறார். இதற்கிடையில் இனியா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்து இருக்க அவர்கள் இந்த விசேஷத்தை நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது பாக்கியா செய்தது என மீண்டும் ஈஸ்வரி மற்றும் கோபி அவர் மீது கோபப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வாரம் பாக்கியலட்சுமி பரபரப்பாக இருக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Read Entire Article