சிறகடிக்க ஆசை: முத்து பிடித்த பாயிண்ட்.. அண்ணாமலை கொடுத்த ஷாக்! ரவி எடுத்த முடிவு

6 hours ago
ARTICLE AD BOX

சிறகடிக்க ஆசை: முத்து பிடித்த பாயிண்ட்.. அண்ணாமலை கொடுத்த ஷாக்! ரவி எடுத்த முடிவு

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 6 தேதிக்கான எபிசோடில் முத்துவிற்கு ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்தவர் மீது சந்தேகம் வருகிறது. அதே நேரத்தில் விஜயா சொன்ன வார்த்தையை வைத்து ரவி கோபப்படுகிறார்.

இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் வித்யா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் பின்னாடியே வரும் முருகன் அடுத்து என்னங்க என்று கேட்க, அப்புறம் சொல்றேன் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார். அவர் போனதும் சீதா கோயிலுக்கு வந்து அருணுடன் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு இருவரும் வெளியே நடந்து வருகிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

தொடங்கியது காதல்

அப்போது அருண் இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ணனும் என்று கேட்க இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. கொஞ்ச நாள் பிரண்டா பழகுவோம் என்று சொன்னதும் அருண் என்னை உங்களுக்கு புடிச்சிருக்கா என்று கேட்க, அதற்கு சீதா எப்படி சொல்லுறீங்க என்று கேட்கிறார். அதற்கு அருண் பிரண்ட் என்று சொல்றீங்களே அதனால்தான் என்று சொல்கிறார்.

அதற்கு சீதா கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ண மாட்டீங்களா? என்று கேட்க சரி நான் வெயிட் பண்றேன் என்று அருண் சொல்கிறார். மறுபக்கத்தில் பரசுராமன் கல்யாண வேலைகளுக்காக பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவிடம் பூ டெக்கரேஷனுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க, அதற்கு மீனா வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் நீ பூ வாங்கணும் வேலை ஆட்களுக்கு பணம் கொடுக்கணுமே அதற்கு முப்பதாயிரம் எழுதிக் கொள்கிறேன் என்று எழுதுகிறார்.

பரசுவின் பட்ஜெட்

முத்துவிற்கு கார் வாடகைக்கு பணம் எழுதிவிட்டு மேக்கப் செய்வதற்கு எவ்வளவு ஆகும் என்று ரோகிணியிடம் ஃபோன் போட்டு விசாரிக்க, அவர் 20,000 ஆகும் என்று சொன்னதும் பத்தாயிரத்திற்கு பண்றீங்களா என்று பரசு கேட்கிறார். அதற்கு ரோகிணி 12000 கொடுங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் கறிக்கடைக்காரர் மணி பரசுவுக்கு போன் போட்டு போடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

முத்துக்கு வந்த சந்தேகம்

உடனே பரசு ஸ்பீக்கரில் போடுகிறார். மாப்பிள்ளை பொண்ணுக்கு தேவையான கட்டில், பீரோ எல்லாம் நான் தான் வாங்குகிறேன் என்று சொல்வதற்காக தான் உங்களுக்கு போன் பண்ணுனேன் என்று மணி சொல்ல இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று முத்துக்கு சந்தேகம் வருகிறது. அதேபோல மீனா இது நல்லா பழக்கப்பட்ட குரலா இருக்கு என்று யோசிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஸ்டாலின் நிஜ மனைவி இந்த பிரபலம் தானா? வதந்திகளுக்கு பதிலடி பதிவு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஸ்டாலின் நிஜ மனைவி இந்த பிரபலம் தானா? வதந்திகளுக்கு பதிலடி பதிவு

மிரட்டும் ஸ்ருதியின் அம்மா

அந்த நேரத்தில் மணி போனை கட் பண்ணி விடுகிறார். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி வருகிறார்கள். மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மா விஜயாவிற்கு ஃபோன் போட்டு நான் சொன்ன விஷயத்தை மாப்பிள்ளை கிட்ட பேசிட்டீங்களா? என்று கேட்க, இப்பதான் வந்தாங்க வந்தவுடனே இதைப் பற்றி எப்படி பேசுறது? இன்னும் பேசல என்று விஜயா சொல்ல, என் பொண்ணு ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போகக்கூடாது நீங்க தான் பேசணும் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்.

அண்ணாமலையின் அட்வைஸ்

பிறகு விஜயா இதைப்பற்றி அண்ணாமலையிடம் சென்று பேசுகிறார். ஸ்ருதி அம்மா சொன்ன விஷயத்தை அவர் சொன்னதும் வரதட்சனை கொடுக்கிறாங்களா என்று அண்ணாமலை கோபப்படுகிறார். அதற்கு விஜயா அவங்க நம்ம பையனுடைய நல்லதுக்கு தானே சொல்றாங்க என்று சொல்ல, அவனுக்கு படிப்பு கொடுத்திருக்கிறோம் நல்ல அறிவோடு இருக்கிறான் அவன் பொழச்சுக்குவான். ஏற்கனவே ஸ்ருதியோட அப்பா என் பொண்ணை பணத்துக்காக ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டீங்கன்னு சொல்றாங்க.

 மீண்டும் முதலிடத்திற்கு வந்த ஹிட் சீரியல்.. சிறகடிக்க ஆசை பிடித்த இடம்!
Top 10 Tamil Serials: மீண்டும் முதலிடத்திற்கு வந்த ஹிட் சீரியல்.. சிறகடிக்க ஆசை பிடித்த இடம்!

இப்போ இதை பண்ணா அதை நியாயப்படுத்துற மாதிரி ஆயிடாதா? அதுவும் இல்லாம இது ரவியும் ஸ்ருதியும் எடுக்க வேண்டிய முடிவு நான் இதில் தலையிட மாட்டேன். நான் எதை சொன்னாலும் கரெக்டா இருக்குன்னு சொல்லி கேப்பாங்க ஆனா இந்த விஷயம் எனக்கு கரெக்டான தோணல. இது அவங்க எடுக்க வேண்டிய முடிவு என்று சொல்லிவிடுகிறார்.

வாக்குவாதம் தொடங்கியது

அடுத்ததாக விஜயா ரவி, ஸ்ருதியை கூப்பிட்டு வைத்து பேசுகிறார். அப்போது ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வந்த விஷயத்தை சொல்ல, முத்து செக் கொண்டு வந்த விஷயத்தை சொல்கிறார். அதைக் கேட்டு ரவியும் ஸ்ருதியும் அதிர்ச்சியாகின்றனர். நாங்க தான் ஏற்கனவே ரெஸ்டாரண்டில் இதைப்பற்றி பேசி அனுப்பிட்டோமே அப்புறம் எதுக்காக இங்க வந்தாங்க என்று ரவக கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதற்கு விஜயா அவன் பேச்சைக் கேட்டுகிட்டு நீ எதுக்கு இப்படி பேசுற. அவங்க உனக்கு ரெஸ்டாரண்ட் வச்சு தரேன்னு சொல்றாங்க என்று சொல்ல, எனக்கு அடுத்தவங்க காசு வேண்டாம் நானே சம்பாதித்து வைத்துக்கொள்வேன் என்று சொல்ல, அதற்கு முத்து சூப்பர் டா நீ தாண்டா என் தம்பி என்று முத்து பாராட்டுகிறார். பிறகு ரவி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
English summary
Siragadikka aasai serial promo(சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 5ஆம் தேதி எபிசோடு):The desire to broadcast on Vijay TV is suspicious of Muthu's uncle in the episode on March 6, 2025. At the same time, Ravi is angry with the word Vijaya.
Read Entire Article