ARTICLE AD BOX
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து செய்த ஒரு செயல் மீனாவுக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியதை முத்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் லீக் செய்துவிடுகிறான். இதனால், அருணை மூன்று நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்துவிடுகிறார்கள். பெரும் சோகத்தில் அருண் வீட்டுக்கு வருகிறான். அருணும் அவன் அம்மாவும் சாப்பிடாமல் வீட்டில் இருக்கிறார்கள்.
இதனைப் பார்த்த சீதா என்ன நடந்தது என்று கேட்க, பின் பிரச்சனையை தெரிந்துக்கொள்கிறாள். நீங்க எமர்ஜென்சிக்காக தானே இப்படி பண்ணீங்க. அதை சொல்லி சமாளிக்க முடியாதா என கேட்கிறாள். அதற்கு அருண். ஒரு ரவுடி என்னை பழி வாங்கிட்டான். வீடியோ எடுத்து நெட்ல போட்டான். எதுவும் பண்ண முடியாது என சொல்கிறான்.
மேலும் இவ்வளவு நாட்கள் அம்மாக்கூட இருக்க முடியலனு சொன்னீங்களே , இந்த டைம்ல நல்லா ஸ்பென்ட் பண்ணுங்க என்று கூறுகிறாள். அவள் சொல்வதை கேட்டு அருணும் சமாதானம் அடைகிறான். அவள் தனக்காவும், அம்மாவுக்காகவும் இந்தளவு உதவி செய்வதை பார்த்து இம்ப்ரெஸ் ஆகிறான் அருண்.
மறுபக்கம் முத்து சந்தோஷத்துடன் வந்து அருணை பழி வாங்கிய விஷயத்தை பற்றி கூறுகிறான். ஆனால், மீனாவுக்கு இது பிடிக்கவே இல்லை. இதெல்லாம் மிகவும் தப்பு, உங்களால ஒருத்தர் வேலைல இருந்து சஸ்பெண்ட் ஆகி இருக்கிறார். மீனா முத்துவுடன் இந்த விஷயம் குறித்து சண்டை போடுகிறாள். பின் இதைப்பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
மறுநாள் காலையில், முத்து மீனாவுக்கு கார் ஓட்ட கற்றுத் தருகிறான். அந்த நேரத்தில் ஸ்ருதி வந்து இருவரையும் போட்டோ எடுக்கிறாள். பின் கார் ஓட்டும்போது சரியாக ஓட்டாததால், மீனாவை திட்டுகிறான் முத்து. பின் மீனா பதிலுக்கு அவன் வாயை அடைப்பதுபோல் பேசுகிறாள். இதனால் முத்து சைலன்ட் ஆகிறான். அதனை தொடர்ந்து அவளுக்கு பாசமாக கார் ஓட்ட கத்து கொடுக்க ஆரம்பிக்கிறான். மீனாவும் அவன் சொல்வதை கேட்டு சரியாக கார் ஓட்ட ஆரம்பிக்கிறாள்.