சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு பறிபோன கண் பார்வை.. ரோகிணி சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் விஜயா

4 hours ago
ARTICLE AD BOX

சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு பறிபோன கண் பார்வை.. ரோகிணி சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் விஜயா

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எதிர்பாராத விதத்தில் மனோஜியின் கண் பார்வை பறிபோகிறது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி ஒவ்வொரு முறையும் மாட்டுவது போன்று கதை வந்தாலும் கடைசியில் அவர் தப்பி விடுகிறார் என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து கொண்டு இருக்கிறது.

Siragadikka aasai serial vijay tv

இந்த நிலையில் நாளை என்று வெளியான ப்ரோமோவில் ரோகிணிக்கு மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் ரோகிணியின் ஷோரூம்க்கே வந்து இருக்கிறார். என்னுடைய உறவுக்கார பையனுக்கு கல்யாணம் நடக்கப்போகிறது அவனுக்கு வாஷிங் மெஷின், பிரிட்ஜ், கட்டில் என எல்லாவற்றையும் நான்தான் வாங்கி தரேன் என்று சொல்லி இருக்கிறேன். அதனால் தான் உன்னுடைய கடைக்கு வாங்க வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 மக்கு என மீண்டும் நிரூபித்த மீனா.. விஜயாவுக்கு கிடைத்த தண்டனை! மாஸ் காட்டிய முத்து
சிறகடிக்க ஆசை: மக்கு என மீண்டும் நிரூபித்த மீனா.. விஜயாவுக்கு கிடைத்த தண்டனை! மாஸ் காட்டிய முத்து

அந்த நேரத்தில் முத்து அண்ணாமலையோடு ஷோரூம் வருகிறார். இதனால் கறிக்கடைக்காரர் தலையில் ஹெல்மெட் போட்டு கொண்டு அங்கு நின்று கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. இப்படியாக ப்ரோமோ வெளியாகியிருக்கிறது

இதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான அடுத்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் மெடிக்கலில் மாத்திரை வாங்கிவிட்டு வருகிறார். அப்போது மனோஜை 30 லட்சம் ஏமாற்றிய கதிர் காரில் போகிறார். அதை பார்த்து கதிர் நில்லுடா என்று அந்த கார் பின்னாடியே மனோஜ் ஓடிப் போகிறார். அந்த நேரத்தில் குறுக்கே இன்னொரு வண்டி வந்துவிட அந்த வண்டியில் மனோஜ் மோதிவிடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதில் அந்த வண்டியின் கண்ணாடி மனோஜ் கண்ணில் குத்தி விடுகிறது. இதனால் மனோஜ் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அப்போது ரோகிணி விஜயாவுக்கு போன் போட்டு மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று சொல்லி அழுகிறார். அதை தொடர்ந்து மனோஜ் கண்ணில் கட்டு போட்டு இருக்கிறது.

சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் சிறகடிக்க ஆசை நடிகை.. இவருக்கு பதில் இவர்தானா? அப்போ அந்த நடிகை?
ரோகிணியிடம் இனி என்னால் யாருடைய தயவும் இல்லாமல் வாழ முடியாதா ரோகிணி என்று அழுது கொண்டிருக்கிறார். அதற்கு ரோகிணி அப்படி சொல்லாத இனி வாழ்க்கை முழுக்க உனக்காக நான் இருக்கிறேன் உனக்கு எதுவும் ஆகாது மனோஜ் என்று நெற்றியில் முத்தம் கொடுக்கிறார். இந்தப் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Siragadikka aasai serial vijay tv

ஏற்கனவே இந்த சீரியலில் மீனா எவ்வளவு அவமானப்பட்டாலும் விஜயாவிற்கு தொண்டுகள் செய்து கொண்டிருப்பது பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் கூட சிந்தாமணி தான் விஜயாவிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லிக்கொடுக்கிறார் என்ற உண்மைகள் மீனாவிற்கு தெரிய வருகிறது.

Siragadikka aasai serial vijay tv

சிந்தாமணி தான் திறமையானவங்க உன்னால அவங்க கிட்ட போட்டி போட முடியாது நீ ஒரு தற்குறி என்று விஜயா சிந்தாமணி முன்பு மீனாவை அவமானப்படுத்துகிறார். ஆனாலும் வீட்டிற்கு வந்ததும் மீனா விஜயாவிற்காக விதவிதமாக சமையல் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். இனி மனோஜ்க்கு கண் பார்வை போயிருக்கும் நிலையில் அடுத்ததாக மனோஜ்க்கும் பணிவிடை செய்ய தொடங்கி விடுவாரா? அல்லது வழக்கம்போல மனோஜ்க்கு மட்டும் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று வீம்பு பண்ணுகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
English summary
Siragadikka aasai serial promo(சிறகடிக்க ஆசை சீரியல் பிப்ரவரி 24ஆம் தேதி எபிசோடு): The Promo has been released from February 26 to March 1 in the Siragadikka aasai Serial, which is aired on Vijay TV. Unexpectedly, Manoji's eyesight is about to look at what happened in detail.
Read Entire Article