சிறகடிக்க ஆசை: அண்ணாமலை கேட்ட கேள்வி! ரோகிணி நிலைமை? விஜயாவுக்கு ஆப்பு வைத்த மனோஜ்

2 days ago
ARTICLE AD BOX

சிறகடிக்க ஆசை: அண்ணாமலை கேட்ட கேள்வி! ரோகிணி நிலைமை? விஜயாவுக்கு ஆப்பு வைத்த மனோஜ்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜயா மற்றும் மனோஜ்க்கு புது பிரச்சனை வந்திருக்கிறது. குடும்பத்தினரை பேச்சைக் கேட்காத விஜயா இப்போது கஷ்டப்படுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்பதுதான் பலருடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்ல ராஜா என்று இயக்குனர் ஒவ்வொரு வாரமும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். கடந்த வாரத்தில் ரோகிணிக்கு இரண்டு பெரிய பிரச்சனை வருவது போன்று ப்ரோமோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

Siragadikka aasai serial vijay tv

ஒரு பக்கம் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் முத்துவிடம் சிக்குவது போன்று காட்டப்பட்டது இன்னொரு பக்கத்தில் ஸ்கூலில் க்ரிஷை முத்துவும் மீனாவும் பார்ப்பது போன்று இருந்தது. இதனால் ரோகிணி பற்றிய உண்மை இந்த வாரத்தில் தெரிய வந்து விடுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வழக்கம் போல ஏமாற்றத்தையே இயக்குனர் பரிசாக கொடுத்திருக்கிறார்.

இரண்டு வாரங்களாகவே ஏமாற்றும் வகைகள் ப்ரோமோக்கள் வெளியானதால் இந்த வாரத்தில் கலகலப்பான மற்றும் காமெடியான கட்சிகள் நிறைந்தது போன்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதாவது விஜயாவை சிந்தாமணி நீங்கதான் ரொம்ப குண்டா இருக்கீங்க என்று ஏற்றிவிட்டு கிண்டல் செய்ததால் விஜயா எப்படியாவது டயட்டிலிருந்து உடம்பை குறைக்க போறேன் என்று சபதம் எடுத்திருந்தார்.

அதனால் நான் டயட்டில் இருக்க போறேன் என்று எல்லாரிடமும் சொல்லி இருந்தார். அதே நேரத்தில் மனோஜ் ஷோரூம்க்கு வந்த ஒரு பெண்ணை பார்த்து மனோஜ் வழிந்து கொண்டிருந்தார். கடைசியில் அவர் நான் டயட்டீஷன் உங்களுக்கு டயட் ஃபாலோ பண்ணனும் என்று நினைத்தால் என்னை காண்டாக்ட் பண்ணுங்க என்று கார்டு கொடுத்துட்டு போயிருந்தார்.

இப்போது விஜயா டயட்டில் இருப்பதற்கு அந்தப் பெண்ணை வீட்டில் கூட்டிக்கொண்டு வந்து மனோஜ் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அந்த பெண்ணிடம் விஜயா நான் டயட்டில் இருக்க வேண்டும் என்றால் என்ன பண்ணனும் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் நீங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மோரில் புதினா சீரகம் போட்டு குடிக்கணும் என்று சொல்ல, அதைக் கேட்டு ரவி இவங்க என்ன நாட்டு வைத்தியம் மாதிரி சொல்லுறாங்க என்று சந்தேகப்படுகிறார்.

 அண்ணாமலையிடம் வீடியோ காலில் சிக்கிய ரோகிணி.. உளறிய க்ரிஷ்.. முத்துக்கு தெரிந்த உண்மை
சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் வீடியோ காலில் சிக்கிய ரோகிணி.. உளறிய க்ரிஷ்.. முத்துக்கு தெரிந்த உண்மை

பிறகு அந்த பெண் சொன்னது போல டயட் சாப்பாடை சாப்பிட்டதால எனக்கு டயடே தெரியல என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ரவி பீசா வாங்கி கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்கிறார். அப்போது முத்து அம்மாவும் மனோஜும் டயட்ல இருக்காங்கடா அதை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்.

பிறகு இரவு தூங்கும் போது விஜயாவுக்கு வயிறு சரியில்லாமல் போய்விடுகிறது. அதேபோல மனோஜுக்கும் வயிறு சரியில்லாமல் அவரும் பாத்ரூமுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார். பிறகு அடுத்த நாள் காலையில் இருவராலும் நடக்க முடியாதது போல வருகிறார்கள். அதோடு இனி நமக்கு டயட்டெல்லாம் செட் ஆகாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதுபோல இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகிணி தன்னுடைய மகனுக்காக பேரன்ட்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது என்று வீடியோ காலில் வருகிறார். ஆனால் தலையில் விக் வைத்து மாறு வேஷத்தில் வருகிறார். அப்போது ரோகிணி பேசுவதை பார்த்து அண்ணாமலைக்கு சந்தேகம் வருகிறது. யாராவது வீடியோ காலில் பேசும்போது கூட கண்ணாடியும் மாஸ்க்கும் போட்டுட்டு பேசுவாங்களா என்று வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை சந்தேகம் ரோகினி மீது திரும்புமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
English summary
Siragadikka aasai serial promo(சிறகடிக்க ஆசை சீரியல் பிப்ரவரி 22ஆம் தேதி எபிசோடு): The Promo for the next week has been released in the serial. Vijaya and Manoj have a new problem. Vijaya, who does not listen to the family, is now suffering.
Read Entire Article