ARTICLE AD BOX

இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதற்கு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இளையராஜாவின் இந்த சாதனைகளை பாராட்டிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் சிவக்குமார் தனது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் இசைஞானி இளையராஜாவின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது சிவக்குமார் தங்கச்சங்கிலியை இளையராஜாவுக்கு பரிசாக அணிவித்தார். மேலும் சூர்யா மற்றும் பிருந்தா இளையராஜாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். மேலும் பிரபலங்கள் பலரும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.