சிம்பு குறித்து அப்படி சொன்ன ரஜினி ... திகைத்த டிராகன் இயக்குனர்!

9 hours ago
ARTICLE AD BOX

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படம் மே 1ல் வெளியாவதாகத் தெரிகிறது. தொடர்ந்து இப்போது ஜெய்லர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் ரஜினி இவ்ளோ சுறுசுறுப்பாகப் படங்களில் நடித்துக் கொண்டு இருப்பது திரை உலகினரையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதே வேளையில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல், ரஜினி உள்பட பலரும் படக்குழுவினரை அழைத்துப் பாராட்டினர். அந்த வகையில் ரஜினியும் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை அழைத்துப் பாராட்டியுள்ளார். இப்போது அஸ்வத் மாரிமுத்து சிம்பு நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இது சிம்புவின் 49வது படம். மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருவதால் அவரது படங்கள் அடுத்தடுத்து பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த டிராகன் பட இயக்குனருடன் சிம்பு கைகோர்த்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ரஜினியை சந்திக்கும்போது அவருடன் பேசிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ரஜினி சார் மீட் பண்ணப்போ 'அடுத்து என்ன பண்றீங்க?'ன்னு கேட்டார். நான் 'அடுத்து எஸ்டிஆர் கூடப் படம் பண்றேன்'னு சொன்னேன். 'அவர் ஆக்சுவலா நிறைய படம் பண்றது இல்ல. ஆனா அவருக்கு வெளியே பெரிய பலம் இருக்கு'ன்னு சொன்னார்.

அதற்கு நான் 'ஆமாம் சார். அவர் வெளியில ரொம்ப உண்மையாக இருக்கிறார். அது மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு'ன்னு சொன்னேன். அதற்கு 'ஆமாம். கரெக்ட்' என்று ரஜினி சார் சொன்னாரு என டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். 

Read Entire Article