ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியில், 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார். ச
ம்பவத்தன்று அங்குள்ள பகுதியில் ஒன்று நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றார். அங்கு வந்த மாணவியிடம், அப்பகுதியில் வசித்து வரும் பொறியியல் பட்டதாரி பாண்டித்துரை என்பவர் கவனித்து பேச்சுக் கொடுத்துள்ளார்.
பாலியல் தொல்லை
பின் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோரிடம் இதுகுறித்து கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் சுங்கச்சாவடி சூறையாடல் விவகாரம்; பொதுமக்கள், விவசாயிகள் என 300 பேர் மீது திருட்டு., + வழக்குப்பதிவு.!
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் பாண்டிதுரையை கைது செய்தனர்.
இதையும் படிங்க: குரங்கை கொன்று சமைத்து சாப்பிட்ட தொழிலாளி; திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்.!