ARTICLE AD BOX
சின்னதா ஒரு வீடே கட்டிடலாம்.. அப்படி ஒரு விலை.. 8.3-இன்ச் டிஸ்பிளேவுடன் Foldable iPhone.. எப்போது அறிமுகம்?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தை நக்கல் அடிக்க வேண்டுமென்றால் சாம்சங் நிறுவனத்திற்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னோடியாக மட்டுமின்றி 'ஸ்ட்ராங்' ஆன இடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனம் ஆனது ஆப்பிளை கிண்டல் செய்யும்படி "எப்போது ஃபோல்ட் ஆகும் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்களேன்? என்று கேட்டிருந்தது.
ஒருவழியாக சாம்சங்கின் இந்த கேள்விக்கு ஆப்பிள் பதில் அளிக்க தயாராக இருப்பது போல் தெரிகிறது. ஆய்வாளர் ஜெஃப் பு வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின் படி, ஆப்பிள் நிறுவனம் 2 போல்டபிள் டிவைஸ்களில் பணியாற்றி வருகிறது. ஒன்று மடிக்கக்கூடிய ஐபோன் (Apple Foldable iPhone); இன்னொன்று - மடிக்கக்கூடிய ஐபேட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோல்டபிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் பற்றிய ஊகங்கள் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எனவே இதற்கு மேலும் தாமதங்கள் செய்யக்கூடாது என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் வருகிற 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இவ்விரு போல்டபிள் டிவைஸ்களுக்கான மாஸ் ப்ரொடெக்ஷனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆக 2026 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோன் அறிமுகம் செய்யப்படலாம். வடிவமைப்பை பொறுத்தவரை ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபோன் ஆனது சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபிளிப் சீரீஸை போன்ற ஒரு கிளாம்ஷெல் வடிவமைப்பை கொண்டிருக்கலாம்
ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோனின் மெயின் டிஸ்பிளேவானது 7.9 முதல் 8.3 இன்ச் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் இருக்கும் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபேட் ஆனது மிகப்பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விரிக்கப்படும் போது 19-இன்ச் வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது டைட்டானியம் அலாய் கவர் மற்றும் துருப்பிடிக்காத எஃகு மற்றும் டைட்டானியம் அலாய் மூலம் கட்டப்பட்ட ஒரு கீலுடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டூயல் லென்ஸ் ரியர் கேமரா செட்டப்பும், இரண்டுமே மடிந்த மற்றும் விரிக்கப்பட்ட நிலைகளில் ரியர் மற்றும் செல்பீ கேமராக்களாக வேலை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இது முழுக்க முழுக்க ஏஐ அம்சங்களால் நிறைந்த ஐபோன் ஆக சந்தைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் எதிர்பார்க்கப்பட்டபடி இருந்தால்.. இதன் பெரிய டிஸ்பிளேக்களை மேம்பட்ட மல்டி டாஸ்கிங் ஏஐ அனுபவத்தை வழங்கும் என்பதில், இது சாம்சங் நிறுவனத்தின் கீழ் இருக்கும் அத்தனை போல்ட் ஸ்மார்ட்போன்களுக்கும் சரியான பதிலடியாக இருக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோனின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது முன்னெப்போதும் காணாத உயர்நிலை அம்சங்களுடன் வருவதால், மிகப்பெரிய விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில அறிக்கைகள் இது $2,500 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.2,07,000) என்கிற விலையை தாண்டக்கூடும் என்கினறன.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க யூஎஸ்பி டைப்-சி போர்ட் இல்லாமல், அதாவது சார்ஜிங் போர்ட் இல்லாத புதிய ஐபோன் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது ஐபோன் 17 ஏர் (Apple iPhone 17 Air) மாடல் ஆகும்.
ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் மாடலை முழுமையாக வயர்லெஸ் ஆக்குவது குறித்து பரிசீலித்தது, இந்த மாடல் மேக்சேஃப் சார்ஜிங்கை மட்டுமே நம்பியிருக்கும்படி உருவாக்க நினைத்தது. இருப்பினும், "யூஎஸ்பி-சி சார்ஜிங் கட்டாயம்" என்கிற ஐரோப்பிய விதிகளுக்கு பயந்து, ஐபோன் 17 ஏர் மாடலில் டைப்-சி போர்ட்டை பேக் செய்ய வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது.
ஆப்பிள் நிறுவனம் வெறும் 5.5 மிமீ தடிமன் கொண்ட மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் 17 ஏர் மாடலில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இதுவரை இல்லாத அளவில் மிகவும் மெலிதான ஐபோன்களில் ஒன்றாக இது மாறும். இது 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் மற்றும் ஐபோன் 16 பிளஸை போலவே சுமார் $900 டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.