ARTICLE AD BOX
Published : 23 Mar 2025 02:14 PM
Last Updated : 23 Mar 2025 02:14 PM
‘சின்ன வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை’ - நடிகர் மணிகண்டன் நெகிழ்ச்சி பதிவு

தொடர்ச்சியாக 3 படங்களும் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியிருப்பதற்கு மணிகண்டன் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குட்நைட்’, ‘லவ்வர்’ மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய 3 படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும் திரையிடப்பட்டது. இந்த வெற்றியை முன்வைத்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மணிகண்டன்.
அப்பதிவில் “சின்ன வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறேன். ஒரு சிறிய படத்தினை 50 நாட்கள் திரையரங்குகளில் கொண்டாடப்படுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் குறிப்பிடத்தக்க சாதனை. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை! நாங்கள் பெற்ற அன்பு எப்போதும் எங்களுடனே இருக்கும்.
என் மீதும் எங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதும் நம்பிக்கை வைத்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பிய இயக்குநர்களுக்கு, இப்படத்தினை வெற்றிபெற உதவிய அனைத்து அற்புதமான நடிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஒவ்வொருடைய பங்களிப்பும் முக்கியமானது. மிகப்பெரிய ஆதரவளித்த பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு நன்றி. என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார் மணிகண்டன்.
Heartfelt Thanks to Everyone
with Love and Gratitude - K.Manikandan pic.twitter.com/VqXOJC9Vj1
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தியாகிகள் தினம் | பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி
- ''தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள்'' - திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
- சென்னை: மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்!
- முயல் வேட்டைக்குச் சென்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு @ ஶ்ரீவில்லிபுத்தூர்