ARTICLE AD BOX
சென்னை,
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கடந்த 1988-ம் ஆண்டு வெளியான 'உரிமை கீதம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.அதனைத்தொடர்ந்து, எஜமான், பொன்னுமணி சிங்காரவேலன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் திரையுலகில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்
இந்நிலையில், தமிழ் சினிமாவின் தரம் தற்போது 6-வது இடத்திற்கு சென்றுள்ளதாக ஆர்.வி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இஎம்ஐ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், 'தற்போதைய காலத்தில் தெலுங்கு சினிமா நம்பர் 1 இடத்திலும், மலையாள சினிமா 2-ம் இடத்திலும் உள்ளது. தமிழ் சினிமா 6-வது இடத்திற்கு சென்றுள்ளது. சரியான தயாரிப்பாளர்கள் இல்லாததே தமிழ் சினிமாவின் பின்னடைவிற்கு காரணம்' என்றார்.