ARTICLE AD BOX
Director Shankar Son Arjith Debut : திரை பிரபலங்களின் பிள்ளைகள் அனைவரும் சினிமாவிற்கு வர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், தங்களது தாய் அல்லது தந்தையை பார்த்து சினிமாவால் ஈர்க்கப்படும் வாரிசுகள், தாங்களாகவே திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்து விடுகின்றனர். விஜய், சிபிராஜ், சாந்தனு என இப்படி தந்தையால் திரையுலகிற்கு வந்தவர்களின் லிஸ்டை எடுத்துக்கொண்டால் அது நீண்டு கொண்டே போகும். சமீபத்தில் விஜய்யின் மகன் கூட திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார். அந்த வகையில், பிரபல இயக்குநர் ஷங்கரின் மகனும் இந்த லிஸ்டில் இணைய இருக்கிறார்.
ஷங்கரின் மகன்:
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்றவர், நடிகர் ஷங்கர். ஆனால், கடைசியாக வெளியான இவரது 2 படங்களும் பெரும் தோல்வியை தழுவியது. இது, இவருக்கு பேரிடியாக விழுந்தது. இவரது மூத்த மகள், திரையுலகில் இருந்தெல்லாம் விலகி குடும்பமாக செட்டிலாகி விட்டார். இரண்டாம் மகள் அதிதி ஷங்கர், விருமன், மாவீரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவரது நடிப்பில் ரிலீஸாக இன்னும் சில படங்களும் காத்துக்கொண்டுள்ளன. இந்த நிலையில் அவரது மகன் அர்ஜித் ஷங்கரும் தனது முதல் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
உதவி இயக்குநராக..
ஒரு சில துணை நட்சத்திரங்கள், சினிமாவிற்குள் நுழையும் போது ஒரு சில பெரிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பின்பு நடிக்க வருவர். நடிகர் கார்த்தி கூட ஆயத எழுத்து படத்தில் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றார். இப்போது ஷங்கரின் மகன் அர்ஜித்தும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறாராம். இது சிவகார்த்திகேயனின் படத்திலா அல்லது சிக்கந்தர் படத்திலா என்பது தெரியவில்லை.
Dir Shankar’s son who is currently working as AD with AR Murugadoss is set to debut as Hero in a film soon.
Direction : Prabhudeva.
- VP pic.twitter.com/g7LVUa0wPL
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 17, 2025
விரைவில் ஹீரோவாக..
ஷங்கரின் மகன் அர்ஜித், கூடிய விரைவில் ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் ஹீரோவாக இணைய இருக்கிறாராம். அந்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? பிரபுதேவாதான். துணை நடிகராக இருந்து, ஹீரோவாக மாறி, நடன இயக்குநர், படத்தின் இயக்குநர் என்று பல திறமைகள் நிரம்பிய இவர், ஷங்கரின் மகனை வைத்து படம் எடுப்பது குறித்து இணையவாசிகள் பரவலாக பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | OG Sambavam பாடலில் இதை கவனித்தீர்களா? சூப்பர் மேட்டரா இருக்கே..
மேலும் படிக்க | சிம்புவின் அடுத்த படத்தில் 2 ஹாட் நாயகிகள்! இவங்கள பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ