சினிமா படப்பிடிப்பு துணை நடிகர் மயங்கி விழுந்து சாவு

23 hours ago
ARTICLE AD BOX

கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் மலையாள சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நடித்து வரும் துணை நடிகர்கள் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். அவர்களுடன் துணை நடிகரான கேரளா மாநிலம் மலப்புரம் அருகே திருப்பளூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதாசன் (39) என்பவரும் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. மயங்கி விழுந்த அவரை சக நடிகர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சினிமா படப்பிடிப்பு துணை நடிகர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Read Entire Article