ARTICLE AD BOX

சிந்தாமணி முன் மீனாவை குறை சொல்லி பேசுகிறார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காபி குடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார் உங்களுக்காக சொன்ன டயட்டீஷியன் வந்திருக்காங்கமா என்று சொல்லி அவரை உள்ளே அழைத்து வருகிறார். உள்ளே வந்த அந்தப் பெண் விஜயாவுக்கு தான் டயட் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் கையில என்ன வச்சிருக்கீங்க என்று கேட்கிறார் காபி என்று சொல்ல முதலில் அதை கீழே வைங்க டயட்டுக்கு முதல்ல முக்கியமே சுகர் சேர்க்கக்கூடாது என்று சொல்லுகிறார். உடனே விஜயாவை பார்த்து நீங்க நேச்சுரலாவே அழகா இருக்கீங்க உங்க முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது என ஐஸ் வைக்க ரோகினிவும் நான் தான் உங்ககிட்ட சொல்லி இருக்கேன்ல ஆன்ட்டி என்று சொல்லுகிறார்.
நீங்க வெயிட் குறைஞ்சுட்டா 20 வயசு கம்மி ஆயிடுவீங்க என்று சொல்ல உடனே முத்து அப்பா நீங்க ரெண்டு பேரும் வெளியே போனா அப்பா பொண்ணுன்னு சொல்லிட போறாங்க என்று கிண்டல் அடிக்க விஜயா அவ அப்படி தான் பேசுவான் விடுங்க என்று சொல்லுகிறார். ரொம்ப பன்னியா பேசுறாரு என்று வந்த பெண் சொல்லுகிறார். உடனே டயட்டுக்கு தேவையான பொருட்களை நானே வாங்கிட்டு வந்துட்டேன் என்று சொல்லிக் கொடுக்க பேஷண்ட் மேல இவ்வளவு அக்கறையா என்று முத்து கேட்க அதற்கு ரோகினி அவங்க பேஷண்ட் இல்ல கிளைன்ட் என்று சொல்லுகிறார். ஏதோ ஒன்னு என்று சொல்ல, வந்த டயட்டீஷியன் பெண் வார வாரம் நான் உங்களுக்கு என்ன சாப்பிடணும்னு எடுத்துட்டு வந்துருவேன் என்று சொல்லிவிட்டு விஜயாவிற்கு சாப்பிட கொடுக்க வேண்டிய உணவுகளை மீனாவிடம் சொல்லுகிறார்.
பிறகு வாங்கிட்டு வந்த பொருளுக்கு 3500 என்றும் ஒரு வாரம் பீஸ்க்கு 4500 என்றும் சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். ஒரு வாரத்துக்கு 8000 ஆகுதா என்று யோசித்து பிறகு விஜயாவிற்காக சம்மதம் தெரிவித்து விடுகிறார். பிறகு அந்தப் பெண் சென்று விட மனோஜ் நானும் டயட் இருக்க போறேன். எனக்கும் சேர்த்து சமைக்க சொல்லிடுங்கம்மா என்று சொல்ல உடனே மீனா போய்க்கொண்டிருந்த பெண்ணை நிறுத்தி நீங்க சமைக்கிறதுக்கு எவ்வளவு காசு வாங்குவீங்க என்று கேட்கிறார். நாங்க சமைச்சு தரதில்ல என்று சொல்ல இல்ல அப்படி சமைக்கிறது என்றால் எவ்வளவு கேப்பீங்க என்று சொல்ல என் தேவைப்பட்டால் நாங்க ஆளா அமைச்சு சமைச்சு கொடுப்போம் அவங்களுக்கு 300 என்று சொல்லிவிட்டு செல்ல விஜயா இப்ப என்ன சமைக்கிறதுக்கு காசு வாங்க போறியா என்று கேட்கிறார். உங்களுக்கு பண்ணி தர ஆனா அவங்களுக்கு பண்ணனும்னா காசு வாங்கிட்டு தான் பண்ணுவேன் என்று சொல்ல முத்து 500 ரூபாய் வேண்டும் என்று சொல்லுகிறார்.
ரவியிடம் உங்க ரெஸ்டாரன்ட் இல்ல டயட் புட்க்கு எவ்வளவு வாங்குவீங்க என்று கேட்க 2000 என்று ரவி சொல்ல முத்து ஐநூறு ரூபா கொடுத்தாக வேண்டும் என்று சொல்லுகிறார் மனோஜ் அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்ல அப்போ உங்க பொண்டாட்டியும் சமைச்சுக்க சொல்லுங்க என்று மீனா சொல்லுகிறார் உடனே ரோகினி எனக்கு வேலை இருக்கு மீனா என்று சொல்ல,எங்களுக்கும் தான் வேலை இருக்கு என்று சொல்லுகிறார் மீனா. உடனே மனோஜ் 300 னா பரவால்ல 500 ரொம்ப ஓவரா இருக்கு என்று சொல்லுகிறார். உடனே முத்து கொஞ்ச நேரத்தில் உஷாவும் மனோஜம் ஒல்லி ஆனால் எப்படி இருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அண்ணாமலை என்னாச்சு என்று கேட்கிறார் அம்மா கூட பரவால்ல ஆனா இவன் ஒல்லி ஆனால் நோயாளி மாதிரி இருக்கான் என்று சொல்லி சிரிக்கிறார்.அவன் இருக்கான் நீ வேலைய பாரு என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார்.
மறுபக்கம் கான்ஸ்டபிள் அருண் சஸ்பென்ஷன் முடிந்து யூனிபார்ம் உடன் முத்து கிழித்த சட்டையை ஆங்கரில் தொங்கவிட்டு நடந்ததை நினைத்து டென்ஷன் ஆகிறார். அந்த நேரம் பார்த்து சீதா பூ கொடுக்க வர அருண் அம்மா அவரை அழைத்து சாப்பிட சொல்லுகிறார் வேண்டாம் என்று சொல்ல சரி பூவுக்கு காசு வாங்கிக்கோமா நான் போய் அருண் கிட்ட வாங்கிட்டு வரேன் என்று சொல்ல வேணா ஆன்ட்டி என்று சொல்லுகிறார் என் பையனுக்கு நேர்மையா இருக்கணும் அவங்க சுத்தி இருக்கிறவங்களும் நேர்மையா இருக்கணும் இல்லன்னா எனக்கு கிளாஸ் எடுத்துவிடுவான் இருமா வாங்கிட்டு வரேன் என்று சொல்வதற்கு வர அருண் வெளியே வருகிறார். வா அருண் சாப்பிடுவ என்று சொல்ல எனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார் சாப்பிட்டு நான் வாஷிங் மெஷின் துணி போடணும் ரூம்ல ஏதாவது இருக்கா என்று சொல்ல இருக்கு ஆனா அந்த ஆங்கர்ல இருக்குற சட்டை எடுக்காத என்று சொல்ல இன்னுமா கோவமா இருக்க விடு என்று சொல்கிறார் என்ன விஷயம் என்று கேட்க அந்த ரவுடி பையன் வேணும்னே வம்பு இழுத்து அருன் சட்டைய கிழிச்சிருக்கான் என்று சொல்ல சீதா கோபப்பட்டு நீங்க போலீஸ் தானே பிடித்து உள்ள போட வேண்டியதுதானே என்று கேட்கிறார் அப்ப நான் டியூட்டில இல்ல சஸ்பென்ஷன்ல இருந்தேன் என்று அருண் சொல்லுகிறார். அதுக்கான நேரம் வரும் கண்டிப்பா சிக்குவாங்க என சொல்ல சீதா பணம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
விஜயா டான்ஸ் கிளாஸில் டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிந்தாமணி சரியா ஆடாமல் இருக்கிறார் உடனே அவரை கூப்பிட்டு தனியாக சொல்லிக் கொடுக்க அவர் பார்வதியை கூப்பிடுகிறார். இல்ல எனக்கு டீ காபி போடுற வேலை இருக்கு என்று சொல்ல, விஜயா எனக்கு டீ காபி எல்லாம் எதுவும் வேண்டாம் பார்வதி டயட் ஃபுட் சொல்லி இருக்காங்க பூ கற்றவ எடுத்துட்டு வருவா என்று சொல்ல சிந்தாமணி பூ கற்றவளா யாரு என்று கேட்க பார்வதி அவ மருமகள தான் அவ அப்படி சொல்ற அவளுக்கு வசதி இல்ல அதனால ஏத்துக்க மாட்டான் என்று சொல்ல வசதி எல்லாம் காரணம் இல்ல அவர் திமிரு புடிச்சவ என்ன மதிக்க மாட்டா என்று சொல்லுகிறார்.
மீனா சாப்பாடுக்கு எடுத்துக் கொண்டு வர, சிந்தாமணியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். சிந்தாமணி என்ன பேசுகிறார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? மீனா என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post சிந்தாமணி முன் மீனாவை குறை சொல்லும் விஜயா, கோபத்தில் அருண்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.