சித்தார்த் நடிக்கும் 3 பிஎச்கே - படப்பிடிப்பு நிறைவு!

10 hours ago
ARTICLE AD BOX

நடிகர் சித்தார்த் நடிக்கும் 3 பிஎச்கே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக 3 பிஎச்கே படத்தில் நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க | காதலரைப் பிரிந்த நடிகை தமன்னா !

மிடில் கிளாஸ் குடும்பத்தின் சொந்த வீடு கனவாக இப்படம் உருவாகி வருவதாகத் தெரிகிறது. 3பிஎச்கே படத்தின் டைட்டில் டீசரை அண்மையில் வெளியிட்டிருந்தனர்.

படத்தின் படப்பிடிப்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்பட சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு இன்று முடிவடைந்ததாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மே வெளியீடாக இப்படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article