"சித்தா" இயக்குனர் படமென்றதும் வீர தீர சூரனில் நடிக்க ஒப்புக்கொண்டேன் - சுராஜ் வெஞ்சரமூடு

7 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகின.தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், கமர்ஷியல் கல்ட் கிளாசிக்காக இப்படம் மாறும் என கருத்து தெரிவித்துள்ளனர். இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், வீர தீர சூரன் படக்குழு புரமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளது. இதற்காக நடிகர்கள் விக்ரம், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் இயக்குநர் சு. அருண்குமார் ஆகியோர் நேர்காணலில் பேசியுள்ளனர்.


நேர்காணலில் பேசிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, "சித்தா இயக்குநர் படமென்றதும் வீர தீர சூரனில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால், எனக்குத் தமிழ் சுத்தமாக வராது. முதல்நாள் படப்பிடிப்பில் சின்ன வசனம்தான் இருந்தது. அடுத்தநாளில், பக்கம் பக்கமான வசனங்கள் எனக்கு வழங்கப்பட்டதும் மாரடைப்பே வந்ததுபோல் ஆகிவிட்டது. அப்படியே, ஓடிவிடலாமா எனத் தோன்றியது. பின், எனக்கு பலரும் தமிழ் மொழிக்கான உதவியைச் செய்தனர். மேலும், சிங்கிள் ஷாட் காட்சி ஒன்றை எடுத்து முடித்ததும் இயக்குநர் அழுதார். என்னவென விசாரித்தால், இன்னொரு டேக் போலாமா என்றார். அது, சிரமமான காட்சி. ஆனாலும், அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் அக்காட்சி எடுக்கப்பட்டதும் மீண்டும் இயக்குனர் அழுதார். என்ன சார் ஆச்சு? என கேட்டால், 'சந்தோஷத்தில் அழுகிறேன்' என்றார். அப்படி, வீர தீர சூரனில் பல அனுபவங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Here is an interview you've been waiting for! ✨An exclusive insight into the #VeeraDheeraSooran team's journey with the film, hitting theaters on March 27th https://t.co/Qs9olJaqkYWith our @chiyaan, #SUArunkumar, @iam_SJSuryah, #SurajVenjaramoodu and @officialdusharapic.twitter.com/3fVw7zZQYD

— HR Pictures (@hr_pictures) March 18, 2025
Read Entire Article