ARTICLE AD BOX
சிலர் குறட்டை பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். இதனால் இரவில் மற்றவர்களால் அவர்களின் அருகில் உறங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் இயற்கை முறையில் சில டிப்ஸ்களை பின்பற்றினால் குறட்டையில் இருந்து படிப்படியாக விடுபட வாய்புள்ளது என்று கோவை சித்த மருத்துவர் உஷா நந்தினி கூறியுள்ளார்.
இதுகுறித்து புதுயுகம் டிவிக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் குறட்டையில் இருந்து விடும் வழிகளை விளக்கியுள்ளார்.
குறட்டை ஏன் வருகிறது?
உடலில் வழக்கம்போல் வாதம், பித்தம் மற்றும் கபம் சீராக இருந்தால் குறட்டை வராது. வாதம் அல்லது கபம் அதிகரிக்கும்போது அவர்களுக்கு குறட்டை பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்த மூன்று நாடிகளையும் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும் உணவு முறைகளை பழகவேண்டும்.
காலையில் தூதுவளைப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து அதை தேனில் குறைத்து சாப்பிடவேண்டும். இரவில் திரிபலா சூரணம் அரை ஸ்பூன் எடுத்து அதை சூடான தண்ணீரில் கலந்து பருகிவரவேண்டும். இவையிரண்டையும் தொடர்ந்து செய்யும்போது, உங்களுக்கு குறட்டை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஸ்னோர் செய்வதும் குறையும். அதேபோல் வரமல்லி கஷாயத்தை காலை நேரத்தில் அல்லது மிட் மார்னிங் ஒரு 11 மணி போல் பருகும்போதும் உங்களுக்கு குறட்டை பிரச்னை குறையும்.
வரமல்லி கஷாயம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
வரமல்லி – 2 ஸ்பூன்
தண்ணீர் – 2 டம்ளர்
கருப்பட்டி – 2 ஸ்பூன் (பொடித்த)
செய்முறை
இரண்டு டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் வரமல்லியைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி கருப்பட்டி கலந்தால் வரமல்லி கஷாயம் தயார்.
குறட்டையைக் குறைக்க வேறு என்ன செய்யலாம்?
மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து படுத்தாலே குறட்டை வருவது குறைய வாய்ப்பு உள்ளது.
உறங்குவதற்காக நீங்கள் அதிக உட்பொருட்கள்கொண்ட மாத்திரைகள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை தவிர்க்கவேண்டும் அல்லது தூங்குவதற்கு வேறு ஏதேனும் செய்கிறீர்கள் என்றால் அதுவும் வேண்டாம். உறங்கச் செல்லும் முன், காலை அல்லது மாலை என நீங்கள் நடைப்பயிற்சிக்கு சென்று வந்தாலே போதும். உங்களுக்கு உறக்கம் நன்றாக வரும். உறக்கத்துக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் குறட்டைக்கு காரணமாகும்.
தண்ணீர் நிறைய பருகவேண்டும். அஜீரணக் கோளாறுகளைப் போக்க உதவும். உங்களுக்கு அஜீரணக் கோளாறுகள் அல்லது கேஸ் கோளாறுகள் இருந்தால், அதையும் நீங்கள் சரியாக்கிக்கொள்ள முயலவேண்டும். மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தையும் நீங்கள் கட்டுப்படுத்தவேண்டும். இதையெல்லாம் செய்தால் குறட்டையைப் போக்கிவிடலாம்.
இவ்வாறு டாக்டர் உஷா நந்தினி தெரிவித்தார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்