ARTICLE AD BOX
உலகின் மிகப்பெரிய வல்லரசு, அதிநவீன விஞ்ஞான வளர்ச்சி, கற்பனைக்கும் எட்டாத சொகுசு வாழ்க்கை, மற்ற நாடுகளுக்கு சிம்ம சொப்பனம் என்றெல்லாம் சொல்லப்படும் அமெரிக்காவில், பல்லாயிரம் குழந்தைகள் மற்றும் அடிமை தொழிலாளிகள் அதிபயங்கர கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, குழந்தை கடத்தலில் சமூக விரோதிகள் ஈடுபட்டு, நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்ற நிஜத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளது இந்த படம்.
வலி மிகுந்த வாழ்க்கையை கண்களின் மூலம் ஆடியன்சுக்கு கடத்திய ஆரி லோபஸ், உச்ச நட்சத்திரங்களுக்கே நடிப்பில் சவால் விடுகிறார். ரெனாட்டா வக்கா, ஆல்ஃபிரடோ காஸ்ட்ரோ, பவுலினா கெய்டன், ஜேசன் பேட்ரிக், டியாகோ கால்வா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். பின்னணி இசையில் லிசா ஜெரார்ட் மிரட்டியுள்ளார். சமூக அக்கறையுடன் மோஹித் ராம்சந்தானி இயக்கியுள்ளார்.
பாதுகாப்பான நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவின் மறுபக்கத்தை தைரியமாக சொன்ன இயக்குனரும், தயாரிப்பாளர் ரூஃபஸ் பார்க்கரும் பாராட்டுக்குரியவர்கள்.