ARTICLE AD BOX

சிங்கப்பெண்ணே தொடரில் அன்பு, ஆனந்தி காதல் தப்பித்தது என்று நினைத்தால் இப்போது அதுக்கும் புதுவிதத்தில் ஆபத்து ஒன்று வந்துள்ளது. இன்றைய எபிசோடில் என்ன நடந்ததுன்னு பார்க்கலாமா... அன்பு ஆனந்தி காதலைக் கண்டதும் தனக்கு அன்பு துரோகம் இழைத்து விட்டதாக மகேஷ் உருக்குலைந்து போகிறான். இதனால் அவனைக் கண்டாலே அவனுக்குள் ஆத்திரம் பற்றிக் கொண்டு வருகிறது. இதனால் மகேஷிடம் தன் காதலைச் சொல்லி எப்படியாவது அவனைப் புரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்று அன்பு நினைக்கிறான்.
அந்தவகையில் அன்பு மகேஷைப் பார்க்க எவ்வளவோ முயற்சிக்கிறான். பார்க்கும்போது எல்லாம் மகேஷ் அவனைக் கொலைவெறியோடு பார்க்கிறான். ஆனந்தியும் அன்புவை எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறாள். ஆனால் அன்பு பிடிவாதமாக இருக்கிறான். இந்நிலையில் இந்த விஷயம் அன்புவின் அம்மாவின் காதுகளுக்கு எட்டுகிறது.
அந்தவகையில் அன்புவின் அம்மாவும் நடந்த விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு மனம் குமுறுகிறாள். அவள் அன்புவிடம் ஏன்டா இப்படி எல்லாம் போய் மகேஷிடம் போய் பாவமன்னிப்பு கேட்குறன்னு சத்தம் போடுகிறாள். அந்தவகையில் மகேஷ் மட்டும் என் கையில் சிக்கினான்னா நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்பேன்.
இன்னொருத்தர் காதலி உனக்குக் கேட்குதான்னு கேட்பேன்னு கொந்தளிக்கிறாள் அன்புவின் அம்மா. அதையே அன்புவின் தங்கையும் ஆமோதிக்கிறாள். ஆனால் அன்புவோ மகேஷின் இடத்தில் நான் இருந்தால் இன்னும் மோசமாக நடந்திருப்பேன் என்கிறான். அதே நேரத்தில் ஆனந்தியோ அவர் பழைய மகேஷ் இல்லை.

அதனால இனி அவரைப் போய்ப் பார்க்க வேண்டாம் என அன்புவிடம் கேட்டுக் கொள்கிறார். இந்நிலையில் மகேஷின் நண்பன் அரவிந்த் தன்னை மித்ரா காதலிக்காமல் மகேஷைக் காதலிக்கிறாளே என்று குமுறுகிறான். அவன் இதற்கு முடிவு கட்ட எண்ணுகிறான். அதனால் நடந்து கொண்டு இருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அன்பு, ஆனந்தி, மகேஷ் மூவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறான். அதன்பிறகு மித்ராவை மணம் முடிக்கலாம் என்று திட்டம் போடுகிறான்.
கோவிலில் அன்புவும், ஆனந்தியும் இனி எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு சாமி கும்பிடுகின்றனர். அந்த நேரம் மகேஷின் நண்பன் முதல்கட்டமாக அன்பு, ஆனந்தியை போட்டுத்தள்ள ஆளை அனுப்புகிறான். இனி நடப்பது என்ன என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.