சாஹல் - தனஸ்ரீ பற்றிய வதந்தி | மாறிமாறி பதிவுகளை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த தம்பதி!

3 hours ago
ARTICLE AD BOX
Published on: 
22 Jan 2025, 1:15 pm

பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரை, பஞ்சாப் அணி சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த நிலையில், சாஹலுக்கும் அவருடைய மனைவியும் மருத்துவர் மற்றும் நடன இயக்குநருமான தனஸ்ரீக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சாஹல்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்த நிலையில், பின்னர் கணவரின் பெயரை நீக்கி மீண்டும் 'தனஸ்ரீ வர்மா' என மாற்றினார். இதனால் சாஹல் - தனஸ்ரீ வர்மா ஆகியோரின் திருமண வாழ்வு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பினர். இந்த நிலையில், சாஹல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உண்மையான காதல் அரிதானது. ஹாய், என் பெயர் 'அபூர்வம்' " எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில், “எங்கள் உறவு தொடர்பான எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தார்.

yuzvendra chahal and dhanashree verma posts on divorce rumours
நீக்கப்பட்ட படங்கள்.. மனைவியைப் பிரிகிறாரா சாஹல்? நடந்தது என்ன?

முன்னதாக இவ்விவகாரம் குறித்து தனஸ்ரீ, "காயம் காரணமாக நான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். இதனால் எனது கணவர் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இச்சூழலில், மக்கள் எங்களைப் பற்றிய சில தவறான செய்திகளை பேசியது குறித்து அறிந்தபோது வேதனையாக இருந்தது. நான் கடினமாக உழைத்து படிப்படியாக என் மரியாதையைப் பெற்றுள்ளேன். இந்த ஆதாரமற்ற வதந்தியால் அதை இழக்க நான் அனுமதிக்கப் போவதில்லை” எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் இறுதியில் அவர் "DVC" என பதிவிட்டுள்ளார். தனஸ்ரீ வர்மா சஹால் என்பதை சுருக்கி அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, சாஹலுடன் இணைந்து எடுத்த நகைச்சுவை வீடியோ ஒன்றை தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டிவி பார்த்துக்கொண்டிருக்கும் சாஹல் அருகே அமர்ந்த தனஸ்ரீ, ”நான் ஒரு மாதம் என் அம்மா வீட்டிற்கு செல்லப்போகிறேன்” என கூறுகிறார். இதை கேட்ட சாஹல் டிவி ரிமோட்டை துக்கி எறிந்துவிட்டு பாலிவுட் பாடலுக்கு நடனமாடுகிறார். சாஹல் உற்சாகத்தில் ஆட்டம்போடுவதை இதை பார்த்து தனஸ்ரீ புன்னகைக்கிறார். இந்த வீடியோவை தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, சாஹல் - தனஸ்ரீ வர்மா தம்பதி இடையே நிலவி வந்த விவாகரத்து பற்றிய வதந்தி செய்திகளுக்கு அவர்களே முடிவு கட்டியுள்ளனர்.

yuzvendra chahal and dhanashree verma posts on divorce rumours
அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ரூ.18 கோடிக்கு சென்ற யுஸ்வேந்திர சாஹல்!
Read Entire Article