சாவா ரூ. 500 கோடி வசூல்!

1 day ago
ARTICLE AD BOX

சத்ரபதி சம்பாஜியின் கதையாக உருவான சாவா திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் கதையாக உருவான சாவா (chchaava) படத்தில் சம்பாஜியாக நடிகர் விக்கி கௌஷலும் நாயகியாக ரஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.

லஷ்மன் உதேகர் இயக்கிய இப்படம் கடந்த பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவாஜியின் மறைவைத் தொடர்ந்து சம்பாஜியின் மராட்டிய படைக்கும் முகலாயப் படைக்கும் இடையே நடக்கும் போராக இப்படத்தின் கதை உருவாகியிருந்தது.

இதையும் படிக்க: விடாமுயற்சி வசூலை முறியடிக்கும் டிராகன்?

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 11 நாள்களிலேயே உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இந்தியாவில் மட்டும் ரூ. 420 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியதாகத் தெரிகிறது.

முக்கியமாக, மகாராஷ்டிரத்தில் பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே திரையிடப்படுவதால் இப்படம் மேலும் வசூலைக் குவித்து இந்தாண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக மாறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article